AIBDPA சங்க அமைப்பு தினமும் சமூக சேவையும் !!
தோழர்களே,
.. 21 10 24 அன்று AIBDPA சங்கத்தின் 16வது அமைப்பு தினம் தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளில், மாவட்டங்களில் மிக உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் நடைபெற்று உள்ளது.
கொடியேற்றல், இனிப்புகள் வழங்குதல், கூட்டங்கள் நடத்துதல் என பல வகைகளில் இது அனுசரிக்கப் பட்டுள்ளது.
ஒரு சில கிளைகள் சமூக சேவைகளும் செய்து இதனை பெருமைப்படுத்தி உள்ளனர்.
1) தர்மபுரி மாவட்ட சங்கம், வள்ளலார் சிறார் இல்லத்தில் பயிலும் 300க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கி கொண்டாடியுள்ளனர்.
2) சேலம் மாவட்டத்தில் நாமக்கல் & சேந்தமங்கலம் கிளைகள் இணைந்து 50 மரக்கன்றுகள் விநியோகம் செய்து அமைப்பு தினத்தை சிறப்பித்துள்ளனர்.
3) சேலம் மாவட்டம் ராசிபுரம் கிளையிலும் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அமைப்பு தினத்தை பெருமைப்படுத்தி உள்ளனர் .
இவை எல்லாம் சமூக சேவையின் ஒரு அங்கமாக பாராட்டப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சிகள் தொடரட்டும்👍
அமைப்பு தினத்தை சிறப்பித்த அனைவருக்கும் மாநிலச் சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது💐
தோழமையுடன்ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
22.10.24
0 Comments