எழுச்சியாக நடைபெற்ற வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்
இன்று (09.10.2024) காலை 11 மணியளவில், வேலூர் தொலைபேசி நிலையத்தில் உள்ள மனமகிழ்மன்றத்தில் வைத்து வேலூர் மாவட்ட AIBDPA-சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் தோழர். C. ஞானசேகரன் அவர்கள் தலைமையில் இனிதே துவங்கியது. தோழர். பி. முருகன், மாவட்ட செயலாளர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட செயற்குழுவை வாழ்த்தி NCCPA மாவட்ட செயலாளர் தோழர் C. தங்கவேலு, BSNLEU- மாவட்ட செயலாளர் தோழர் B. மாரிமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
திருவண்ணாமலை கிளை செயலாளர் தோழர் A.கிருஷ்ணன், ஆரணி கிளை செயலாளர் தோழர் வி.பிச்சாண்டி ஆம்பூர் கிளையின் சார்பாக D.ராஜேந்திரன், திருப்பத்தூர் கிளை சார்பாக தோழர் குப்புலிங்கம், ராணிப்பேட்டை கிளை செயலாளர் தோழர் ரகுபதி, செய்யாறு கிளைச் செயலாளர் தோழர் கார்த்திகேயன், வேலூர் கிளை செயலாளர் தோழர் ஜி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அமைப்பு நிலை பற்றியும், நிதி வசூல் கணக்குகள் பற்றியும், மெடிக்கல் பில் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்தும் விரிவாக பேசினர்.
மாவட்டத் துணைச் செயலாளர் தோழர். சரவணன் திருவண்ணாமலை அவர்கள் இன்றுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசினார். இதைத் தொடர்ந்து கிளைச் செயலாளர்களின் கேள்விகளுக்கு மாவட்டச் செயலாளர் தோழர். முருகன் பதில் கூறினார்.
தோழர். பொன். லோகநாதன், மாநில துணைத்தலைவர் அவர்கள் சிறப்புரையாற்றினார். மாவட்ட மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய தோழர்களுக்கு பொன்னாடை அணிவிக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. மேலும் ஓய்வு பெற்றவர்களின் சொசைட்டி பிரச்சனையை தீர்ப்பதற்காக தீவிரமான ஒரு போராட்டத்திற்கு மாநில சங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மெடிக்கல் பிரச்சனையில் தீர்க்கப்படாத பிரச்சனைகளை பட்டியலிட்டு மீண்டும் பொது மேலாளர் அவர்களை சந்தித்து விவாதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 07.08.2024இல் நடைபெற்ற மாவட்ட மாநாட்டின் வரவு செலவு கணக்குகள் படிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. டெல்லி செல்லும் தோழர்களுக்கு உதவி செய்வதற்காக நிதி திரட்டுவதென்றும் மாநில மாநாட்டிற்கான நன்கொடை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
வேலூர் கிளைச் செயலாளர் தோழர். ஜி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நன்றி கூற மாவட்ட செயற்குழு மாலை 3 மணி அளவில் இனிதே நிறைவுற்றது.
தோழமையுடன்ப. முருகன்
மாவட்ட செயலாளர்.
AIBDPA- வேலூர்.
0 Comments