சென்னை CGM அலுவலக 6 வது மாவட்ட மாநாடு
CGM தமிழ்நாடு சென்னை மாவட்ட மாநாடு 26.10.2024 சனிக்கிழமை 10:30 மணிக்கு நமது BSNLEU சங்க அலுவலகத்தில் துவங்கியது. மாவட்ட துணை தலைவர் தோழர். அப்துல்பாரி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர். T. கோதண்டம் அனைவரையும் வரவேற்று பேசினார். அறிக்கை சமர்ப்பித்தார்.
சிறப்புரை தோழர் S. செல்லப்பா AGS BSNLEU அவர்கள் சங்க செயல்பாடுகள் பற்றி வாழ்த்தி பேசினார்கள். தோழர். C.K. நரசிம்மன், Circle President AIBDPA, தோழர் R. ராஜசேகர் Circle secretary AIBDPA அவர்கள் மாவட்ட சங்கத்தின் செயல்பாடுகள் களபோராட்டம், தர்ணா, மற்றும் ஆர்ப்பாட்டம் போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்டது பற்றி இருவரும் பேசினார்கள். தோழர். K. சீனிவாசன் ACS & DS, BSNLEU CGM office சங்கத்தை வாழ்த்தி பேசினார்கள். முடிவில் தோழர் R. சிரில்ராஜ் நன்றி கூறி முடித்து வைத்தார்.
மாவட்டதின் புதிய நிர்வாகிகள் தேர்தலை மாநில செயலாளர் தோழர். R. ராஜசேகர் அவர்கள் நடத்தி புதிய நிர்வாகிகள் பட்டியலை ஏகமானதாக ஜனநாயமுறைப்படி அறிவித்தர்கள்.
மாவட்ட தலைவராக தோழியர் பெர்லின் கனகராஜ்,
மாவட்ட செயலாளராக தோழர் ஆர் சிரில்ராஜ்
மாவட்ட பொருளாளராக தோழர்.M. மகாலிங்கம்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தோழமையுடன்,R. சிரில்ராஜ்
மாவட்ட செயலாளர் சென்னை CGM அலுவலகம்,
AIPDPA.
26.10.24
0 Comments