எழுச்சியாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட 6வது மாவட்ட மாநாடு
அன்புத் தோழர்களே !! வணக்கம்.
தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின் 6வது மாவட்ட மாநாடு 26-11-2024 அன்று தூத்துக்குடியில் உள்ள எண். 16, மாசிலாமணிபுரம் PC வேலாயும் அரங்கம் (தோழர்கள். K. காந்தி, TKS நினைவரகில்) வைத்து மாவட்டத் தலைவர் தோழர்.T. சுப்பிரமணியன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற நிகழ்வில் தேசியக் கொடியை மூத்த தோழர். K. பாலகுருசாமியும், AIBDPA சங்கக்கொடியை மாநிலச் செயலர் தோழர். R.ராஜசேகரும் ஏற்றி வைத்தனர். அஞ்சலி தீர்மானத்தை தோழர். K. சுப்பையா நிறைவேற்றினார். வந்திருந்த அனைவரையும் வரவேற்று தோழர். V.குணசேகரன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட மாநாட்டை துவக்கி வைத்து மாநிலச் செயலர் தோழர். R.ராஜசேகர் துவக்க உரை ஆற்றினார். தூடி 6வது மாவட்ட மாநாட்டில் தனது துவக்க உரைக்கு முன்னதாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டை முன்னிட்டு 26.11.2024 அன்று (இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையை) மாநிலச் செயலர் தோழர். R. ராஜசேகர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். அதனை தொடர்ந்து "புதிய கிரிமினல் சட்டங்கள் வரமா ? சாபமா ?" என்ற தலைப்பில் தோழர். S. மோகன்தாஸ் அகில இந்திய துணைத்தலைவர் அவர்களும் "ஒன்றுபட்ட பென்சன் (UPS) திட்டம் வரமா ? சாபமா ?"என்ற தலைப்பில் தோழர். S. நடராஜா மாநில பொருளாளர் அவர்களும் கருத்துரை வழங்கினர்.
. நெல்லை மாவட்டச் செயலர் தோழர். S. முத்துசாமி, விருதுநகர் மாவட்டச் செயலர் தோழர். K. புளுகாண்டி BSNLEU மாவட்டச் செயலர் தோழர். G. ஸ்ரீ தரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உணவு இடைவேளைக்கு பின் நடைபெற்ற பொருளாய்வுக்குழுவில் மாவட்டச் செயலர் தோழர்.P. ராமர், செயல்பாட்டு அறிக்கையையும் மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன் நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்தனர். மாநிலத் தலைவர் தோழர். C.K. நரசிம்மன் மாநாட்டை வாழ்த்தி நிறைவுரை ஆற்றினார். தூடி 6வது மாநாட்டில் கோவில்பட்டி கிளை சார்பில் மாநில மாநாட்டு நிதியாக ரூ.15000/- வழங்கப்பட்டது
மாவட்டச் செயலர் மற்றும் மாநிலச் செயலரின் நிறைவுரைக்குப் பின் செயல்பாட்டு அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கை ஏகமதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வை மாநிலச் செயலர் தோழர். R.ராஜசேகர் நடத்தி வைத்தார். கீழ்க்கண்ட தோழர்கள் மாவட்டச் சங்க புதிய நிர்வாகிகளாக ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டத் தலைவர் : T. சுப்பிரமணியன் STM RTD TT
மாவட்ட உதவித் தலைவர்கள் : 1) P. மோகன் TM RTD CHG
2) P. முத்துராமலிங்கம் TM RTD KVT
3) S. ராஜமணி TT RTD TT
4) M. முத்துசாமி TM RTD KYR
.. 5) K. சுப்பிரமணியன் TT RTD TT
மாவட்டச் செயலர் . : P. ராமர் STS RTD TT
மாவட்ட உதவிச் செயலர்கள் : 1) K. சுப்பையா TTA RTD KVT
2) V.குணசேகரன் SSS RTDTCH
3) K. கோலப்பன் SDE RTD KVT
4) S. பால்ராஜ் பட்டுகுமார் OS RTD TT
5) T. ராஜாராம் DE RTD SKM
மாவட்டப் பொருளாளர் : K. கணேசன் TM RTD TT
மாவட்ட அமைப்புச் செயலர்கள் : 1) A.ஜேசுதாசன் TM RTD TT
2) A. சுப்பையா JE RTD KUB
3) T.சுகுமார் தேவதாஸ் TT RTD TT
4) S. முருகேசன் TM RTD KVT
5) T. சந்திரசேகர் TM RTD ERA
மேலும் மூத்த தோழர்கள் M. முத்தையா K.கந்தசாமி A.சந்திரசேகர் P.அய்யாபிள்ளை P. ராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட ஆலோசகர்களாக தேர்வாகினர்.மாநாட்டில் மாவட்ட ஆலோசகர்கள் கௌரவிகப்பட்டு மாநிலச் செயலர் தோழர். R. ராஜசேகர் பொன்னாடை போர்த்தினார்.
மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டது. 8 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன் நன்றி கூற மாநாடு நிறைவு பெற்றது. மாநாடு சிறக்க பணி செய்த மற்றும் நிதி வழங்கிய தோழர்கள், கலந்து கொண்ட மத்திய மாநில மாவட்டச் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்களுக்கு மாவட்டச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
பெ.ராமர்
மாவட்டச் செயலர்
தூத்துக்குடி மாவட்டம்
0 Comments