AIBDPA TN சுற்றறிக்கை 22/24 ..dt.7.11.2024
மாநில மைய கூட்ட முடிவு 7.11.24
தோழர்களே,
மாநில மையம் 7.11.24 அன்று இணைய வழியில் நடைபெற்றது. மாநில தலைவர் தோழர்.C.K. நரசி்ம்மன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர். R. ராஜசேகர், மாநில பொருளாளர் தோழர். எஸ். நடராஜா, மாநில துணை தலைவர் தோழர்.பி. மாணிக்க மூர்த்தி ஆகியோர் கடந்து கொண்டனர்.
நவம்பர் 12 13 தேதிகளில் டெல்லியில் நடைபெறும் பேரணி சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.
நமது மாநிலத்தில் இருந்து 110 தோழர்கள் கலந்து கொள்வது பாராட்டப்பட்டது. கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உதவும் வகையில் மாநில சங்கத்திலிருந்து நபர் ஒன்றுக்கு தலா ரூபாய் 500/ தருவது என முடிவெடுக்கப் பட்டுள்ளது.
எனவே மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திலிருந்து கலந்து கொள்ளும் தோழர்களுடைய எண்ணிக்கை, பெயர், மற்றும் யாருக்கு பணம் அனுப்பப்பட வேண்டும் என்கின்ற தகவலோடு அவரது G-Pay நம்பரையும் மாநில பொருளாளர் தோழர் எஸ் நடராஜா அவர்களுக்கு அனுப்பி வைக்கவும்.
. தோழர்கள் தங்கும் இடம் தொடர்பாக அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் கே ஜி ஜெயராஜ் அவர்களுடைய தகவலை உங்களுக்கு பகிர்ந்து உள்ளோம். அதில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும்.
அத்துடன் நமது அகில இந்திய அமைப்புச் செயலரும் மாநிலத் துணைச் செயலாளர் தோழர் V. வெங்கட்ராமன் 9443066877 & 9944609677 மற்றும் மாநில அமைப்பு செயலாளர் தோழர் ஜாபர் 9443002460 & 6382113133 அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.
டில்லி செல்லும் தோழர்கள் அங்கு குளிர் இருக்கும் என்பதால் தேவையான கம்பளி ஆடைகள், சால்வை எடுத்துச் செல்வது உதவிகரமாக இருக்கும். தேவையான மருந்துகள் எடுத்துக் கொள்ளவும்.
நாம் எல்லோரும் டெல்லியில் சந்திப்போம்.
தோழர். சி. எஸ். பஞ்சாபிகேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகம் சி எஸ் பஞ்சாபகேசன் இயக்கத்தோடு இணைந்த வாழ்க்கை என்கின்ற புத்தகம் நமது மாவட்டங்களுக்கு கொடுத்து அனுப்பப்பட்டிருக்கிறது.
வேலூர், கடலூர், பாண்டிச்சேரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருநெல்வேலி தலா ஐந்து புத்தகங்களும், விருதுநகர், குன்னூர், தர்மபுரி, நாகர்கோயில் தலா மூன்று புத்தகங்களும், தூத்துக்குடி இரண்டு புத்தகங்களும் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு புத்தகத்தின் விலை 80 ரூபாய். அதன் பணத்தை மாநில பொருளாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்கவும்.
தோழமையுடன்ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
8 11 24
0 Comments