AIBDPA TN சுற்றறிக்கை 23/24....dt. 08.11.2024
BSNL மாநில நிர்வாகத்துடன் சந்திப்பு
தோழர்களே,
. 8.11.2024 அன்று மாநில செயலர் தோழர். ஆர். ராஜசேகர், தோழர். சீனிவாச ராகவன் அவர்களும் CGM அலுவலகத்தில் GM (HR) திரு. துளசிராமன் அவர்களை சந்தித்து கீழ்க்கண்ட பிரச்சினைகளை விவாதித்தோம்.
1) திருச்சி மாவட்டத்தில் குடும்ப ஓய்வுதியர்களுக்கு மெடிக்கல் Option மாற்றுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கான corporate office உத்தரவை வழங்கி உள்ளோம். தக்க முடிவு எடுப்பதாக அறிவித்துள்ளார்.
2) சேலம் மாவட்டத்தில் அனைத்து ஓய்வூதியகளும் மீீண்டும் மெடிக்கல் ஆப்ஷன் தர வேண்டும் என்ற நிர்வாகத்தினுடைய நிலைப்பாடு குறித்து அவரிடம் பேசினோம். மெடிக்கல் ஆப்ஷன் ஒருமுறை கொடுத்தால் போதும். அவர் ஆப்ஷன் மாற்றுகின்ற வரை அது நீடிக்கும் என்கின்ற உத்தரவினையும் அவருடைய பார்வைக்கு கொண்டு சென்றோம்.
இது குறித்து சேலம் மாவட்ட நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு விவாதித்தார். அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்படும்.
3) கடலூர் மாவட்டத்தில் கண் சிகிச்சை பிரச்சினையில் (cataract surgery) கடந்த காலங்களில் மெடிக்கல் பில் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை இருந்தது. இப்பொழுது அங்கு அகர்வால் மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்டு இருப்பதால் அந்த பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கிறது. எனினும் பழைய பில்கள் இன்னும் ஏற்கப்படவில்லை.
அதேபோல் தற்போது சேலம் BAவிலும் கண் சம்பந்தமான cataract surgery புற நோயாளியாக தான் ஏற்றுக் கொள்ளப்படும். Indoor treatment ஆக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கிற நிர்வாகத்தின் வாதத்தை அவரிடம் தெரிவித்தோம்.
அவர் அதற்கும் சேலம் நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு cataract surgery என்பது indoor treatment என்பதை வலியுறுத்தி இருக்கிறார். தேவைப்பட்டால் இதற்கான ஒரு பொதுவான வழிகாட்டுதல் கொடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
(மேற்குறிப்பிட்ட மூன்று பிரச்சனைகளுக்கும் நிர்வாகத்திற்கு மாநில சங்கத்தின் சார்பில் கடிதம் கொடுத்து இருக்கிறோம்)
பிறகு அவரிடம்
4) காலதாமதமாக தரப்படும் மெடிக்கல்
பில்களுக்கு நியாயமான காரணங்கள் இருந்தால், அதற்கு condonation தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். ஈரோட்டில் நிராாரிக்கப்பட்ட billஐ மீண்டும் அனுப்ப சொல்லி இருக்கிறார். சாதகமாக முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
5) non empanell ஹாஸ்பிடலில் எடுக்கப்படும் சிகிச்சைகளுக்கு எமர்ஜென்சி சர்டிபிகேட் இருந்தால் அதை கணக்கில் எடுத்துக் கொண்டு பில்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.
எட்டு விதமான வியாதிகளுக்கு எமர்ஜென்சி சர்டிபிகேட் அடிப்படையில் non empanell ஹாஸ்பிட்டலில் சிகிச்சை எடுத்து இருந்தாலும் அவை பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். (அதற்கான circle office உத்தரவு உள்ளது.)
இன்றைய கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது.
தோழமையுடன்ஆர் ராஜ சேகர்
மாநிலச் செயலாளர்.
8.11.24
0 Comments