Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற ஈரோடு மாவட்ட அவல்பூந்துறை கிளையின் பொதுக்குழு கூட்டம்

சிறப்பாக நடைபெற்ற ஈரோடு மாவட்ட அவல்பூந்துறை கிளையின் பொதுக்குழு கூட்டம்




அன்பு தோழர்களே வணக்கம் !!         

  அவல்பூந்துறை கிளையின் பொதுக்குழு கூட்டம் 23 11 2024 அன்று தோழர்.ஜி. ராஜேந்திரன்  கிளை தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சங்கக் கொடி தோழர். ராஜா சுந்தர வடிவேல் ஏற்றி வைத்தார். தோழர். சண்முகசுந்தரம் கிளை செயலாளர் வரவேற்புரை ஆற்றினார். 

        மாவட்ட செயலாளர் தோழர். V. மணியன் துவக்க உரையாற்றினார்.  தோழர். N. குப்புசாமி மாநில உதவி தலைவர் அவர்களும் தோழர். சி. பரமசிவம் மாவட்ட துணைத் தலைவர் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள் . தோழர். G.வெங்கடேசன் மாவட்ட பொருளாளர் அவர்களும், தோழர். கிருஷ்ணமூர்த்தி மாவட்ட அமைப்பு செயலாளர் அவர்களும், தோழர். S. அய்யாசாமி சிறப்பு அழைப்பாளர் அவர்களும், தோழர். சௌந்தர்ராஜன் மேற்கு 1கிளை செயலாளர் அவர்களும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்  

            திருச்சியில் டிசம்பர் 19/20/2024 நடைபெறக்கூடிய மாநில மாநாட்டிற்கு அவல்பூந்துறை கிளையின் சார்பாக தோழர். ஜி. ராஜேந்திரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார் இறுதி நிகழ்வாக நன்றி உரையாக தோழர்.O.P. நடராஜன் அவர்கள் நன்றியரை கூறினார்கள். பொது குழுவை கூட்டிய அவல்பூந்துறை கிளைச் சங்கத்திற்கு மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

தோழமையுள்ள 

V மணியன் மாவட்ட செயலாளர்

Post a Comment

0 Comments