20.12.2024 AIBDPA தமிழ்மாநில மாநாட்டின் 2வது நாள் நிகழ்ச்சிகள்
திருச்சியில் இன்று 20.12.2024 AIBDPA தமிழ்மாநில மாநாட்டின் 2வது நாள் நிகழ்வுகளாக பொருளாய்வுக்குழு சிறப்பாக துவங்கியது. மாநிலத் தலைவர் தோழர். C.K. நரசிம்மன், மாநிலச் செயலர் தோழர். R. ராஜசேகர் உரைகளோடு துவங்கியது. அகில இந்திய பொதுச் செயலர் தோழர். K. G.ஜெயராஜ் விளக்க உரை ஆற்றினார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த தோழியர் கல்யாணி D/o Late தோழர். தண்டபாணி நீண்டகாலமாக (2017 முதல்) குடும்ப ஓய்வூதியம் கிடைக்காமல் இருந்தது. நமது சங்கத்தின் கடும்... முயற்சியால் அவருக்கு குடும்ப ஓய்வூதியமும், ஓய்வூதிய நிலுவையையும் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
.. அதற்காக பாடுபட்ட திருச்சி மாவட்ட, சேலம் மாவட்ட செயலர்கள் மற்றும் முன்னாள் மாநிலச் செயலர்கள் மற்றும் இந்நாள் மாநிலச் செயலர், தலைவர் ஆகியோருக்கு கல்யாணி அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
மேலும் நமது சங்கத்தின் வளர்ச்சிக்கு ரூ. 20,000/- நன்கொடை வழங்கினார். தோழர். கல்யாணியை கௌரவிக்கும் விதமாக மாநிலச் சங்கம் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
திருச்சியில் இன்று 20.12.2024 AIBDPA தமிழ்மாநில மாநாட்டின் 2வது நாள் நிகழ்வில் கலந்துகொண்ட சார்பாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள்.
0 Comments