தமிழ் மாநில AIBDPA சங்கத்தின் 7வது மாநில மாநாடு- டிசம்பர் 19&20, 2024 திருச்சி.
2024 டிசம்பர் 19-20 தேதிகளில் திருச்சி எல்.கே.எஸ் மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு 7வது மாநில மாநாடு மிகவும் உற்சாகமாக நடைபெற்றது.
மாநாட்டின் நுழைவு வாயில் தோழர் C S பஞ்சாபகேசன் பெயரிலும் மாநாட்டு அரங்கம் தோழர்கள் S M சேகர் மற்றும் தோழர் T பழனி நினைவரங்கமாக அமைக்கப்பட்டிருந்தது.
தேசியக் கொடி திருப்பூர் குமரன் நினைவிடத்தில் இருந்தும், நமது சங்கக் கொடி வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் இருந்தும், தியாகிகள் ஜோதி பொன்மலை ரயில்வே சங்கத் திடலிலிருந்தும் பெரும் உற்சாகத்துடன் கொண்டு வரப்பட்டது.
மாநாட்டின் தொடக்கமாக கொடியேற்ற நிகழ்வில் மாநிலத் தலைவர் தோழர் சி.கே.நரசிம்மன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். சங்கக் கொடியை பொதுச் செயலாளர் தோழர் கே ஜி ஜெயராஜ் அவர்கள் விண்ணதிரும் முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார்.
காலை 10 மணிக்கு நடைபெற்ற கருத்தரங்கிற்கு மாநிலத் தலைவர் தோழர் சி.கே.நரசிம்மன் தலைமை வகித்தார். சிஐடியு செயலாளரும், வரவேற்புக் குழுத் தலைவருமான தோழர் எஸ் ஸ்ரீதர் தனது உரையில் திருச்சியின் முக்கியத்துவத்தை சுருக்கமாக எடுத்துரைத்தார். வந்திருந்த அனைவரையும் மாநிலச் செயலர் தோழர்.ஆர்.ராஜசேகர் வரவேற்றார்.
பொதுச்செயலாளர் தோழர் கே ஜி ஜெயராஜ் மாநாட்டை துவக்கி வைத்தார். தொடக்க உரையில், 5வது அகில இந்திய மாநாட்டை 2025 டிசம்பரில் கோயம்புத்தூரில் நடத்த முடிவு செய்ததற்கு பொதுச் செயலாளர் வாழ்த்து தெரிவித்தார்*. P&T தொழிற்சங்க இயக்கத்தின் சிறந்த பாரம்பரியத்தைப் பின்பற்றி, AIBDPA, நாட்டின் மிகப் பெரிய ஓய்வூதியம் பெறுவோர் அமைப்பாக தற்போதைய நிலைக்கு எவ்வாறு வளர்ந்துள்ளது, சரியான போராட்டப் பாதை மற்றும் அதன் அனைத்துப் புகழும் போராடும் உறுப்பினர்களுக்கே உரித்தானது என பொதுச் செயலாளர் விளக்கினார். 12-11-2024 அன்று புது தில்லியில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் முடிவுகளையும், ஜனவரி 2025ல் “ஓய்வூதியரைச் சந்திப்போம்” பிரச்சாரத்தின் முடிவுகளைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு கிளையிலும் அதை மிக வெற்றிகரமாக செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.
சிஐடியு மூத்த தலைவரும், துணைத் தலைவருமான ஏ.கே.பத்மநாபன் சிறப்புரையாற்றி, நரேந்திர மோடி அரசின் தொழிலாளர் விரோத, ஓய்வூதியர் மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளை முழுமையாக அம்பலப்படுத்தி, ஒற்றுமை மற்றும் போராட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
BSNL மீதான அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும், BSNLன் வளர்ச்சி மற்றும் ஊழியர்களின் ஊதிய உயர்வுக்காக BSNLEU மற்றும் AUAB நடத்திய போராட்டங்களையும் தோழர்.S.செல்லப்பா, AGS, BSNLEU விளக்கினார்.
CHQ துணைத் தலைவர் தோழர் எஸ்.மோகன்தாஸ், CHQ அமைப்புச் செயலர் தோழர் V. வெங்கட்ராமன், CHQ துணைப் பொருளாளர் தோழர் V. சீதாலட்சுமி, BSNLEU மாநிலச் செயலர் தோழர் P. ராஜு, TNTCWU மாநிலச் செயலர் சையத் இத்ரீஸ், AIPRPA மாநிலச் செயலர் தோழர் P. மோகன் மற்றும் தோழர் K. கோவிந்தராஜ், AGS. & மாநிலச் செயலாளர், சென்னை தொலைபேசி முதலியோர் உரையாற்றினார்.
(மாநாட்டில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உட்பட 320 சார்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
பொது அரங்கில் ஐநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.)
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரதிநிதிகள் அமர்வில் மாநிலச் செயலர் தோழர். ஆர். ராஜசேகர் அறிக்கையையும், மாநில பொருளாளர் தோழர். சு. நடராஜா வரவு செலவு கணக்குகளையும் சமர்ப்பித்தனர்.
செயல் அறிக்கை மற்றும், அமைப்பு நிலை பற்றிய ஆக்கப்பூர்வ விவாதத்தில் 43 தோழர்கள் பங்கேற்றனர். அறிக்கை மற்றும் கணக்குகள் இரண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பின்னர் விவாதத்தில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு தோழர்.ஆர்.ராஜசேகர் திறம்பட பதிலளித்தார்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வுத் செய்யப்பட்டனர்
தோழர்.C K நரசிம்மன் (ஆலோசகர்)
தோழர்.சி.ஞானசேகரன் (தலைவர்)
தோழர்.ஆர்.ராஜசேகர் (மாநிலச் செயலாளர்)
தோழர்.ஏ.இளங்கோவன் (பொருளாளர்).
தோழர்.பி இந்திரா, அவர்களை கன்வீனராகக் கொண்ட 9 தோழர்கள் கொண்ட மகளிர் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தோழர் எஸ் ஸ்ரீதர் (தலைவர்) மற்றும் ஏ இளங்கோவன் (பொதுச் செயலாளர்) தலைமையிலான வரவேற்புக் குழுவினர் மாநாட்டின் மாபெரும் வெற்றிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்தனர்.
0 Comments