AIBDPA TN சுற்றறிக்கை 24/24 ...... dt.6 12 24.
சென்னை பென்ஷன் அதாலத் 5-12-2024
தோழர்களே !!
சென்னையில் 5.12.24 அன்று DOT பென்ஷன் அதாலத் நடைபெற்றது. அதாலத்தில் Pr.CCA திரு. அவதேஷ் குமார் அவர்கள் மற்றும் CCA அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நமது AIBDPA தமழ் மாநில சங்கத்தின் சார்பில் தலைவர் தோழர். C.K.நரசிம்மன், தோழர். R. ராஜசேகர் மாநிலச் செயலாளர், சென்னை மாவட்ட செயலாளர் தோழர். சிரில்ராஜ் மற்றும் சென்னை தோழர்கள் கலந்து கொண்டனர் .
கொடுக்கப்பட்டிருந்த 73 பிரச்சினைகளில் 63 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நமது சென்னை மாவட்டத்தின் சார்பில் 5 LPD சம்பந்தமான பிரச்சினைகளை கொடுத்திருந்தோம். அவற்றுக்கு திருத்தப்பட்ட சம்பள விகிதம் சரிதான் என்று நிர்வாகம் பதில் சொல்லி பிரச்சனையை முடிக்கப்பட்டதாக அறிவித்திருந்தாலும், நாம் தொடர்ந்து விவாதம் நடத்தி, அவற்றை DOTயின் மறுபரிசீலனைக்கு அனுப்புவதாக முடிவு எடுத்துள்ளார்கள்.
நாம் மேலும்
1) குடும்ப ஓய்வூதியம் மாற்றப்படும் பிரச்சனைகள் காலதாமதப்படுவதையும், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் வந்த பிறகும் அரியர்ஸ் போடப்படுவதில் உள்ள கால தாமதத்தையும் விளக்கியுள்ளோம்.
2) பிறகு நவம்பர் மாதம் DLC அப்டேட் ஆகாத பிரச்சினையையும் இதனால் பலருக்கு பென்ஷன் வராததையும்
3) அக்டோபர் மாத IDA பட்டுவாடா ஆகாத பிரச்சனையையும் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறோம்.
அவை விரைவில் தீர்க்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார்கள்.
4) பிறகு சங்கங்கள் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு ஒரு NODEL அதிகாரி வேண்டும் என்கின்ற கோரிக்கையையும் நாம் முன் வைத்திருக்கிறோம்.
அந்த பிரச்சினையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
தோழமையுடன்,R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்.
6 12 24.
0 Comments