Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை எண் 27/ 24.. dt.24.12.24

  AIBDPA TN  சுற்றறிக்கை எண் 27/ 24.. dt.24.12.24

வெறிச்சோடி கிடக்கும் சென்னை CCA அலுவலகம்

தோழர்களே, 

மாநில மாநாட்டை வெற்றி பெறச் செய்த அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்💐 பாராட்டுக்கள்🙏 

                 24.12.2024 அன்று ஓய்வூதியர்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சென்னை CCA அலுவலகத்திற்கு மாநிலச் செயலர் தோழர். R. ராஜசேகர் மாநில அமைப்பு செயலர் தோழர். A. ஆரோக்கியநாதன் மற்றும் திருப்பூர் தோழர். R. சீனிவாசராகவன் ஆகியோர் சென்று இருந்தோம். ஒரு சில பிரச்சினைகள் குறித்து தகவல்கள் வாங்கினோம். 

              ஆனால்.... CCA அலுவலகம் இன்று வெறிச்சோடி கிடக்கிறது. இதுதான் ஒரு சில நாட்களாக நிலைமை என்று தகவல். காரணம் ஒரு சில காரணங்களினால் அவுட்சோர்சிங் நியமிக்கப்பட்டிருந்த ஊழியர்கள் பணியில் இல்லை. வருட கடைசியில் என்ற காரணத்தினால்  ஊழியர்கள் பலரும் விடுப்பில் சென்று விட்டதாக தகவல். ஆகவே ஒன்று இரண்டு அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் அலுவலகத்தில் இல்லை. 

ஆகவே பிரச்சனைகளை முழுமையாக பேச முடியவில்லை.  இருப்பினும் மாநிலச் சங்கம் தொடர்ந்து அந்தப்  பணியில் ஈடுபடும். 

 இம்மாத பென்ஷன் வழங்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல் முன்னதாகவே பென்ஷன் பட்டுவாடா செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

மாநிலச் சங்கம் பிரச்சனையை தீர்க்கும் திசைவழியில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கும். 

தோழமை வாழ்த்துக்களுடன்,
 R.ராஜசேகர். 
மாநிலச் செயலாளர்.
24.12.24.

Post a Comment

0 Comments