Latest

10/recent/ticker-posts

AIBDPA TN dt.28.12.24...தீர்மானங்கள்

  AIBDPA TN   dt.28.12.24

அகில இந்திய BSNL-DOT ஓய்வூதியர் சங்கம்
7வது தமிழ் மாநில மாநாடு - திருச்சி

       2024 டிசம்பர் 19&20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற 7வது தமிழ் மாநில மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட

தீர்மானங்கள்


1. AIBDPA 7வது தமிழ் மாநில மாநாட்டை அனைத்து அம்சங்களிலும் மிக சிறப்பாக நடத்தி முடித்த திருச்சி மாவட்ட வரவேற்புக் குழுவை இம் மாநில மாநாடு பாராட்டுகிறது.

2. அகில இந்திய BSNL-DOT ஓய்வூதியர் சங்கத்தின் 5வது அகில இந்திய மாநாட்டை தமிழ்நாட்டில் கோயமுத்தூரில் எழுச்சிகரமாக 2025ம் ஆண்டு இறுதிக்குள் நடத்துவது என ஏகமனதாக இம் மாநில மாநாடு தீர்மானித்துள்ளது.

3. BSNL ஓய்வூதியர்களுக்கு 15% உயர்வுடன் ஓய்வூதிய மாற்றம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

4. புதிய பென்சன் திட்டம், ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் ஆகியவற்றை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். EPF பென்சன்தாரர்களுக்கு மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ 9000/-மாக உயர்த்தப்படவேண்டும்.வருங்கால வைப்பு நிதியை தனியார் நிறுவனங்களிலும் பங்கு சந்தையிலும் முதலீடு செய்வதை நிறுத்த வேண்டும். 

5. BSNL நிறுவனத்தின் நிலங்களும், சொத்துகளும் விற்கப்படாமலும் திருடு போகாமலும் பாதுகாக்கப்பட வேண்டும். 

6. BSNL நிறுவனம் 4G, 5G சேவைகளை முழுமையாக வழங்குவதற்கு ஒன்றிய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

7. ஒன்றிய அரசின் நவீன தனியார்மய - தாராளமய - உலகமயக் கொள்கைகளைக் கைவிட வேண்டும்.

8. BSNL நிறுவனத்தில் இரண்டாவது விருப்ப ஓய்வுத் திட்டத்தை அமுல்படுத்தப்பட கூடாது. 

9. BSNL ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  பணிப் பாதுகாப்பு, குறைந்த பட்ச ஊதியம், மாதாந்திர சம்பள பட்டுவாடா, போனஸ், EPF - ESI சலுகைகள் ஆகியவை வழங்கப்படவேண்டும்.

10. TT ஊதிய விகிதம் நிர்ணயிக்கும்போது ஓர் ஆண்டு உயர்வுத் தொகை குறைத்து ஓய்வூதியம் நிர்ணயித்துள்ள குறைபாட்டை உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டும். மேலும் 

11. 78.2% பஞ்சப்படி இணைப்பில் விடுக்கப்பட்டவர்களின் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும். 

12. பணி ஓய்வுபெறும் நாளுக்கு மறுநாள் ஆண்டு உயர்வுத் தொகை நிலுவையானவர்களுக்கு ஆண்டு உயர்வுத் தொகை வழங்கபட வேண்டும். 

13. மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் மெடிக்கல் பில் பட்டுவாடா ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு முழுமையாகவும், துரிதமாகவும் வழங்கப்பட வேண்டும்.

14. சென்னை CCA அலுவலகத்தில் தேவையான ஊழியர்களை நியமனம் செய்து தேங்கியுள்ள ஓய்வூதியர் பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும்.

15. COMMUTATION கால அளவை நீதிமன்ற உத்தரவின்படி 10 ஆண்டுகளாக குறைக்கப்பட வேண்டும் என இம் மாநில மாநாடு வேண்டுகிறது.

16. விஷம் போல் ஏறிவறும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும்,

17. 44 தொழிலாளர் நலச் சட்டங்களை வெட்டிச் சுருக்கி உருவாக்கப்பட்டுள்ள நான்கு சட்டத் தொகுப்புக்களை கைவிடக் கோரியும்,

18. சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தைப் பதிவு செய்து ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசாங்கமும் சாம்சங் நிர்வாகமும் நிறைவேற்ற வேண்டும்.

19. ரயில்வே அங்கிகாரத் தேர்தலில் அபார வெற்றி பெற்று அங்கிகாரம் பெற்றுள்ள DREUவிற்கு இம் மாநில மாநாடு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

20. ஒன்றிய அரசாங்கமும், மணிப்பூர் மாநில அரசாங்கமும் மணிப்பூர் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளை  உடனடியாக எடுக்க வேண்டும்.

21. ஒப்பந்தமுறை, தற்காலிகமுறை, அவுட்சோர்சிங் உள்ளிட்ட உழைப்புச் சுரண்டல்கள் நிறுத்தப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுப்பணிகள், பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணி இடங்கள் நிரந்தர முறையில் நிரப்பப்பட வேண்டும்.

22. தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்  உடனடியாக  அமுல்படுத்தப்பட வேண்டும். போக்குவரத்து கழக ஓய்வூழியர்களுக்கு  ஓய்வுகாலப் பண பலன்கள், நிறுத்தி வைக்கப்பட்ட பஞ்சப்படி உடனடியாக வழங்கப்பட வேண்டும். திட்டப்பணியாளர்களுக்கும், முறைசாரா தொழிலாளர்களுக்கும் மாத ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டும்.

23. டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ஒன்றிய அரசாங்கம் கைவிட வேண்டும்.

24. விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 200 நாட்கள் வேலை, கூலி உயர்வு அமுல் படுத்தப்பட வேண்டும்.

25. இந்திய நாட்டின் இயற்கை வளங்கள், நிலங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என திருச்சியில் நடைபெற்ற AIBDPA 7வது தமிழ் மாநில மாநாடு வேண்டுகிறது.

தோழமையுடன்
R.ராஜசேகர்
மாநில செயலர்
28.12.24

Post a Comment

0 Comments