Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற AIBDPA கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்

 சிறப்பாக நடைபெற்ற AIBDPA கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்




தோழர்களே ! வணக்கம். 

கடலூர்  மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று  (09.12.2024) மாவட்ட தலைவர் தோழர். N. மேகநாதன் தலைமையில் கடலூரில்  நடைபெற்றது. மாவட்ட உதவிச் செயலர்   தோழர். A. அண்ணாமலை  அஞ்சலிவுரை ஆற்றினார். மாவட்ட  செயலர் தோழர். I.M. மதியழகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

செயற்குழுவிற்கான அஜெண்டா ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் மாவட்ட செயலர் செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். அறிக்கை மற்றும் அஜெண்டா மீது 14 தோழர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். விவாதத்தில் தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மாவட்ட செயலர் விளக்கமளித்து விவாதத்தை முடித்து வைத்தார்.

          மாநில சிறப்பு அழைப்பாளர்  தோழர். S. முத்துக்குமரசாமி கிளைச்சங்கள் செயல்பாடு மேம்பட ஆலோசனை கூறி  சிறப்புரையாற்றினார். BSNLEU மாவட்ட செயலர் தோழர் S. சௌந்தரராஜ் வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் மாவட்ட பொருளாளர் தோழர். B.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

எடுக்கப்பட்ட முடிவுகள்

1.மாவட்ட மையம்

தோழர்கள்:
I.M.மதியழகன்(DS)
N.மேகநாதன்(DP) 
B.சந்திரசேகரன்(DT)
A.அண்ணாமலை(ADS),
G.கோவிந்தராஜலு (DVP)

 V.மூர்த்தி (BS-CDL)  ஆகியோரை கொண்ட மாவட்ட மையம் அமைக்கபட்டது.

2.மாநில மாநாட்டு பிரதிநிதிகள்

திருச்சி மாநில மாநாட்டில் கலந்துகொள்ள கடலூர் மாவட்டத்திற்கு எட்டு பிரதிநிதிகள்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி கிளைச்செயலர் தங்களது கிளையிலிருந்து யாரும் கலந்துகொள்ள இயலாது என கருத்து தெரிவித்த நிலையில் மீதமுள்ள எட்டு கிளைகள் மாநில மாநாட்டில் கலந்துகொள்ள முடிவு எடுக்கப்பட்டது. மாநில மாநாட்டு  பார்வையாளர்கள் நமக்கு ஒதுக்கப்பட்டால்  விருப்பம் தெரிவித்துள்ள மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும் முறையாக ஒதுக்கப்படும்

கிளைகள் மாநில மாநாட்டில் கலந்துகொள்ள இயலாவிட்டால், தகவலை மாவட்ட சங்கத்திடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

3. DEATH RELIEF  FUND:

        நமது உறுப்பினர்கள் இயற்கையெய்தினால், அவர்களின்  குடும்பத்தினருக்கு ஈமச்சடங்கு நிதி வழங்கிட Death Releif Fund உருவாக்கி, செயல்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி ஈமச்சடங்கு நிதியாக ரூ.5,000/- கொடுக்கப்படும். ஒவ்வொரு உறுப்பினரும்,  வருடாவருடம் ஜனவரி மாதம் ரூ.300/- இந்த திட்டத்திற்கு செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தில் இணைபவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமே திட்டத்தின் பலன் கிடைக்கும். இந்த திட்டம் உடனடியாக செயல்பாட்டிற்கு  வரும் என முடிவு எடுக்கப்பட்டது.*

எனவே கிளைச் செயலர்கள் உறுப்பினர்களிடமிருந்து திட்டத்தின் வருட சந்தாவை உடனடியாக வசூல் செய்து மாவட்ட சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

4. கிளைக்கூட்டங்கள்

  கிளைக்கூட்டங்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும். முறையான பதிவேட்டில் கூட்ட நடவடிக்கைகளை பதிவு செய்திட வேண்டும். கிளை உறுப்பினர்களின் உயிர்வாழ் சான்றிதழ் (DLC) விபரத்தை கிளைச்சங்கம் பராமரிக்க வேண்டும்

மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு மாவட்ட சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மாவட்ட செயற்குழு முடிவுகளை அமுலாக்கிட அனைவரும் இணைந்து செயல்படுவோம்.  

தோழமையுடன்,
I.M.மதியழகன்
மாவட்ட செயலர்.

கடலூர் மாவட்டம்.

Post a Comment

0 Comments