தேசிய / சங்க கொடிப்பயணம் துவங்கியது
தோழர்களே !!
கோவை மாவட்ட சங்கத்தின் சார்பாக மாநிலச் சங்கம் பணித்த பணியான, மாநில மாநாட்டில் ஏற்றப்படும் தேசியக் கொடியானது கோவை மாவட்டத் தலைவர் தோழர். B. சௌந்தரபாண்டியன் தலைமையில், தோழர் முகமது ஜாபர் மாநில அமைப்பு செயலாளர் அவர்களது முன்னிலையில் துவங்கியது. தோழர். குடியரசு நிகழ்ச்சி குறித்து விளக்கி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தொடர்ந்து தோழர். சுப்பிரமணியம் BSNLEU முன்னாள் மாநில உதவி செயலாளர் வாழ்த்துரை வழங்கினார். அடுத்து CITU திருப்பூர் தலைவர் தோழர். உன்னிகிருஷ்ணன் நிகழ்ச்சியினை வாழ்த்தி தேசிய கொடியை மாவட்ட செயலாளர் கையில் எடுத்துக் கொடுத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் கொடிகாத்த குமரன் நினைவிடத்தில் இருந்து 18.12.24 காலை 1030 மணிக்கு பயணம் துவங்கியது. நிகழ்ச்சியில் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் N.P. ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் K. சந்திரசேகரன் மாவட்ட உதவி தலைவர் தண்டபாணி மாவட்ட அமைப்புச் செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சிக்கு தோழர் விஸ்வநாதன் திருப்பூர் கிளை செயலாளர் நன்றி கூறி நிறைவு செய்தார்
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்
0 Comments