Latest

10/recent/ticker-posts

கோவை AIBDPA அ இ மாநாட்டிற்கு நன்கொடையாக ரூபாய் 50,000 வழங்கிய ஸ்ரீ லட்சுமி முத்துராமன்

 கோவை AIBDPA அ இ மாநாட்டிற்கு நன்கொடையாக ரூபாய் 50,000 வழங்கிய ஸ்ரீ லட்சுமி முத்துராமன்





தோழர்களே !!

             வெற்றி மீது வெற்றி வந்து நம்மை சேரும் இதை வாங்கி கொடுத்த பெருமை எல்லாம் மாவட்ட ,மாநில சங்கத்துக்கு சேரும் !! 

     தோழர்களே  ஸ்ரீ லட்சுமி முத்துராமன் அவருடைய குடும்ப ஓய்வூதிய பிரச்சனை கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து கொண்டிருந்தது. இதை மாவட்ட அளவில் தொடர்ந்து 3 அதாலத்தில் போடப்பட்டு  போடப்பட்டு இறுதியாக C PENGRAMS  போடப்பட்டது. BSNLEU மாவட்டச்  சங்கம்   நல்ல உதவிகரமாக இருந்தது. தொடர்ந்து இடைவிடாது மாநில சங்கம் எடுத்த நடவடிக்கையில்  கிராஜுட்டி  மற்றும் குடும்ப ஓய்வூதியம்  சரி செய்து ₹ 20 இலட்சம்  பெற்றுத் தரப்பட்டுள்ளது.  இன்று அந்தக் குடும்பத்தை ஓய்வூதியர் சந்திப்பில் சென்று சந்தித்தோம். சந்திப்பின் போது இந்தக் குடும்பத்தார் நீங்கள் ஏதும்   மாநாடு நடத்தினால்  ஏதாவது நாங்கள் உதவி செய்யலாமா என்று கேட்டனர் .நீங்கள் செய்யலாம் என்று, நாங்கள்  பதில் கொடுத்தோம். பிறகு அந்தக் குடும்பத்தார் நால்வரும் ஒரு அறைக்குள்  குடும்பமாக விவாதித்து ரூபாய் 50,000. காசோலையாக அகில இந்திய மாநாட்டிற்கு நன்கொடையாக மலர்ந்த முகத்துடன்  கொடுத்தனர் என்ற மகிழ்ச்சி கலந்த  செய்தியை  பதிவிடுகிறோம். நன்கொடை வழங்கிய குடும்பத்தாருக்கு  மனமார்ந்த வாழ்த்துக்களை மாவட்டச் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments