AIBDPA TN சுற்றறிக்கை 2/25 ......dt.02.01.2025.
கனரா வங்கி பென்ஷன் பட்டுவாடா தாமதம் தொடர்பாக
தோழர்களே,
கனரா வங்கியில் ஓய்வூதியம் பெறும் தோழர்களுக்கு இன்றுவரை பென்ஷன் பட்டுவாடா செய்யப்படவில்லை. இதுதொடர்பாக Jt.CCA திருமதி கௌதமி பாலாசிங் அவர்களையும் கணக்கு அதிகாரி (AO) திருமதி பாத்திமா அவர்களையும் இன்று மாநில செயலர் தோழர். R. ராஜசேகர் அவர்களும் மாநில அமைப்புச் செயலர் தோழர். A. ஆரோக்கியநாதன் அவர்களும் சந்தித்துப் பேசினோம்.
.. "SBI வங்கியில் இருந்து பைல்கள் (software) கனரா வங்கிக்கு மாறுகின்ற பொழுது கனரா வங்கி சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக பென்ஷன் பட்டுவாடா நின்று போனதாகவும் அது CCA அலுவலகத்திற்கு சரியாக தெரிவிக்கப்படவில்லை.
எனவே CCA அலுவலகம் அந்த பைல்களை திரும்பக் கேட்டு சரிசெய்து அனுப்புவதற்கான நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கின்றோம்" என்று Jt.CCA அவர்கள் தெரிவித்தார்கள். சுமார் 6,000 ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வரும் ஞாயிறு(05.01.2025) இரவுக்குள் அந்த பணிகள் முடிந்துவிடும்.
இது நிதி பட்டுவாடா சம்பந்தப்பட்ட பிரச்சனை என்கின்ற காரணத்தினால் பாதுகாப்பு கருதி ஒருவர் மட்டும்தான் இந்த பணியில் ஈடுபட முடியும் என்றும் Jt.CCA அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த பிரச்சினையின் தன்மை நமக்கு புரிகின்றது எனினும் ஏற்பட்ட பிரச்சனையை கணக்கில் எடுத்துக்கொண்டு திங்கட்கிழமை வரை காத்திருப்போம். எனினும் நாம் நிர்வாகத்திடம் இதனை எவ்வளவு துரிதப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவுபடுத்த வேண்டும் என்பதனையும் கேட்டு இருக்கிறோம். அவர்களும் முயற்சிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.
0 Comments