தோழர்களே, மத்திய சங்கம் ஜனவரி மாதம் முழுவதும் ஓய்வூதியர்களை சந்திப்பதற்கு ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் அறிவித்திருந்தது. மாநில சங்கமும் அந்த இயக்கத்தை மாநிலம் முழுவதும் நடத்துவதற்கு அறைகூவல் கொடுத்திருந்தோம். ஆனால் ஒரு சில மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அந்த இயக்கம் இன்னும் துவங்கப்படவில்லை.
கோயம்புத்தூர் மாவட்டம் தினந்தோறும் அந்தப் பணியினை சிறப்பாக செய்து வருகிறார்கள். கிளைகள் தோறும் பல உறுப்பினர்களை சந்தித்து அந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துகிறார்கள். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்👍. பாராட்டுக்கள்.💐
வேலூர் மாவட்டமும் தாங்கள் அச்சடித்த காலண்டரை உறுப்பினரிடம் சேர்க்கும் வகையில் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கத்தை வெற்றிகரமாக அமுல்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கும் மாநிலச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.👍 பாராட்டுக்கள்.💐
மற்ற மாவட்டங்கள் உடனடியாக இதனை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.
0 Comments