Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை 5/25....dt.22.01.2025.

  AIBDPA TN சுற்றறிக்கை 5/25....dt.22.01.2025.

சென்னை கூட்டுறவு சங்க பிரச்சனை




கூட்டுறவு சங்க பதிவாளர், தமிழ்நாடு அவர்களுக்கு AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் வேண்டுகோள்


தோழர்களே, 

சென்னை கூட்டுறவு சங்க பிரச்சனை அனைவரும் அறிந்ததே. 

             2018க்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கும் இறந்து போனவர்களுக்கும் சொசைட்டினுடைய நிலுவை பணம் இதுவரை பட்டுவாடா செய்யப்படவில்லை. 

இதுகுறித்து மாநிலச் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது தொடர்ந்து தோழர்களுக்கு விளக்கப்பட்டு வருகிறது. 

            அண்மையில் மத்திய கூட்டுறவு சங்க பதிவாளர்,  புதுடெல்லி அவரிடமிருந்து தமிழ்நாடு கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்களுக்கு இந்த பிரச்சினையை ஆய்வு செய்ய அறிக்கை அளிக்க  கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. 

                          இதன் அடிப்படையில் நமது மாநிலச் சங்கம் தமிழ்நாடு கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்களுக்கு உரிய  நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதி அதனை 

திருமதி ஆர் பிருந்தா 

கூடுதல் பதிவாளர் 

தமிழ்நாடு அவர்களிடம் சமர்ப்பித்து இருக்கிறோம். 

அவர்களும் இப்பிரச்சினையில் நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதி அளித்து உள்ளார்கள். 

       இந்த நிகழ்ச்சியின் போது மாநிலச் செயலாளர் தோழர் R.ராஜசேகர், மாநில அமைப்புச் செயலாளர் தோழர் A.ஆரோக்கிய நாதன், சென்னை தொலைபேசி மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர் A.T.வெங்கடதாஸ் மற்றும் தோழர். M. கோபி ஆகியோர் உடன் இருந்தார்கள். 

நிச்சயமாக இப்பிரச்சினையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர் பார்ப்போம். 

தோழமையுடன், 
R.ராஜ சேகர், 
மாநிலச் செயலாளர், 
22 1 25.

Post a Comment

0 Comments