Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை 6/25...dt.24.1.25

  AIBDPA TN  சுற்றறிக்கை 6/25...dt.24.1.25




தோழர்களே, 

BSNL MRS திட்டம் தொடர்பான ஒரு சில விளக்கங்களை பிஎஸ்என்எல் கார்ப்பரேட் அலுவலகம் 23.1.25 அன்று வெளியிட்டுள்ளது. அதன் சிறப்பம்சங்களை தமிழில் உங்களுக்கு விவரித்துள்ளோம். இந்த உத்தரவுடன் பல்வேறு உத்தரவுகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை மாவட்ட செயலர்கள் நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

இது பல பிரச்சனைகளுக்கு நமக்கு பயன்படும். 

தோழமையுடன் 
R.ராஜசேகர்
மாநில செயலர்
24.1.25

BSNL Corporate Office உத்தரவு தேதி 23.1.25


I) வெளி நோயாளி  முறையில் மருத்துவர் பரிந்துரைக்கான காலம் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கான கால அளவு...

i) மருத்துவரின்  பரிந்துரையில் எத்தனை நாட்கள் கால அளவு குறிப்பிடுகின்றாரோ, அத்தனை நாட்கள் மட்டுமே பரிந்துரை செல்லத்தக்கது. 

ii) நாள்படாத, தொடர்ச்சியற்ற (Non chronic) நோய்களுக்கு ஒரு மாத கால அளவிற்கான மருந்துகள் மட்டுமே ஒரு சமயத்தில் வாங்க முடியும்.

iii) நாள்பட்ட தொடர்ச்சியான நோய்களுக்கு (chronic ) மருத்துவர் குறிப்பிடும் கால எல்லைக்குள்(உதாரணம்- 6 மாதங்கள், 1 ஆண்டு) மூன்று மாத கால அளவிற்கான மருந்துகள் மட்டுமே ஒரே சமயத்தில் வாங்க முடியும்.

II) அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள்.

i) அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கான செலவுகளை அனுமதிக்க,  BSNLMRS O.M dt 08.08.2005 பாரா 1 விதியின்படி  தலைமை பொது மேலாளர்கள் மட்டுமே அதிகாரம் பெற்றவர்கள்.

ii) CGHS OM dt 09.10.2020 உத்தரவின்படி குறிப்பிடப்படும் அரசு மருத்துவனைகள் BSNL MRS திட்டத்திலும் அரசு மருத்துவமனைகளாக கருதப்படும்.

iii) அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கான செலவுகளை திரும்பப் பெருவதற்கான வழிகாட்டுதல்கள்

a) ஊழியருக்கு அனுமதிக்கப்பட்ட வார்டு (General, Semi private, Private) அடிப்படையில் மருத்துவ சிகிச்சைக்கான தொகை அனுமதிக்கப்படும்.

b) அரசு மருத்துவமனை சிகிச்சையின் காலத்தில் அரசு மருத்துவரின் பரிந்துரையின் படி அனுமதிக்கப்படும் வெளி மருத்துவமனை மற்றும் வெளி மருத்துவரின் கட்டணம் என்பது CGHS திட்ட கட்டண விகிதப்படி அனுமதிக்கப்படும்.

III) BSNL MRS மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை செலவுகளை திரும்பப் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள்.

i) BSNLMRS OM dt 02.09.2009 வழிமுறையின் படி இது அனுமதிக்கப்படும்.

ii) ஒரே சமயத்தில் BSNL MRS மற்றும் மருத்துவ காப்பீடுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ செலவுகளில் அனுமதிக்கப்படும் தொகையின் அளவு என்பது, 30.08.2022 தேதியில் வெளியிடப்பட்ட BSNL MRS கடித வரையரையின் படி அனுமதிக்கப்படும்.

IV) செயற்கை உபகரணங்களுடன் கூடிய சிகிச்சைக்கான தொகையை பெறுவதற்கான வழிகாட்டுதல்கள்.

i) செயற்கை உபகரணங்களுடன் கூடிய சிகிச்சைக்கான செலவுத் தொகையினை பெறுவதற்கான வழிமுறையும், கட்டண விகிதமும் CGHS order No 11011/25/2014/CGHS -(P)dt 08.07.2014 ஆணையில் உள்ளபடி வழங்கப்படும். 

ii)இந்தத் தொகையானது ஊழியரின் வெளிநோய் சிகிச்சைக்கான ஆண்டு அனுமதி தொகையை மிகாமல் இருக்கும்.























Post a Comment

0 Comments