AIBDPA TN சுற்றறிக்கை 7/25.....dt.25.01.2025
1) மாநிலச் சங்க நிதி நிலை கணக்குகள் ஒப்படைப்பு மற்றும் வங்கி கணக்குகள் பெயர் மாற்றம்
2) Pr.CCA திரு. அவதேஷ் குமார் அவர்களுடன் மாநில சங்க நிர்வாகிகள் அறிமுக சந்திப்பு
தோழர்களே,
1) 23.01.25 அன்று நம்முடைய சங்கத்தின் கணக்குகள் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொருளாளர் தோழர். A. இளங்கோவன் அவர்களிடம் தோழர். S. நடராஜா அவர்களால் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குகளும் புதிய நிர்வாகிகள் பெயர்களுக்கு மாற்றம் செய்ய கடிதம் தரப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு 23.1.25 மற்றும் 24.1 .25 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்துள்ளது.
இந்த நிகழ்வின் போது மாநில சங்க ஆலோசகர் தோழர். C.K.நரசிம்மன், மாநிலச் செயலாளர் தோழர் R.ராஜசேகர், மாநில பொருளாளர் தோழர் A.இளங்கோவன், மாநில துணைத் தலைவர் தோழர் S.நடராஜா, மாநில அமைப்புச் செயலாளர் தோழர். A. ஆரோக்கிய நாதன், சென்னை மாவட்ட செயலாளர் தோழர். சிரில்ராஜ், திருச்சி மாவட்ட துணைத் தலைவர் தோழர். K. நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
2) Pr.CCA திரு. அவதேஷ் குமார் அவர்களுடன் சந்திப்பு. 24 1 25.
தோழர்களே,
Pr.CCA திரு. அவதேஷ் குமார் அவர்களை 24-1-25 அன்று மாநில சங்கத்தின் சார்பில் சந்தித்து புதிய நிர்வாகிகளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தோம்.
இந்த நிகழ்வின் போது மாநில சங்க ஆலோசகர் தோழர் C.K. நரசிம்மன், மாநிலச் செயலாளர் தோழர் R.ராஜசேகர், மாநில பொருளாளர் தோழர் A.இளங்கோவன், மாநில துணைத் தலைவர் தோழர் S.நடராஜா, மாநில அமைப்புச் செயலாளர் தோழர் A. ஆரோக்கியநாதன், மற்றும் திருச்சி மாவட்ட துணைத்தலைவர் தோழர் K. நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
Pr.CCA அவர்களிடம் நாம் முன்வைத்த பிரச்சினைகளும் அவருடைய விளக்கங்களும்.
1) VRS 2019-ல் சென்றவர்களுக்கு 60 வயது நிறைவடையாமல், VRS ஐந்து ஆண்டு காலம் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள அனைவருக்கும் பிப்ரவரி மாதம் கம்முடேஷன் மற்றும் DCRG தரப்படவேண்டும். இந்த எண்ணிக்கை 3,000 த்துக்கும் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் கூடுதலான ஊழியர்களை இதற்காக ஒதுக்கி இந்த பணிகள் செய்யப்பட வேண்டும்.
மாநிலச் சங்கம் 20.1.25 அன்று இது தொடர்பாக ஒரு கடிதம் கொடுத்திருக்கிறது. எனவே எவ்வித பிரச்சினையும் இன்றி அனைவருக்கும் நிதி பட்டுவாடா செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இருக்கின்றோம்.
இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி முறையாக நிதி பட்டுவாடா செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக Pr.CCA உறுதி அளித்துள்ளார்.
2) குடும்ப ஓய்வூதியர்கள் F/P authorisation பிரச்சனை.
கடந்த சில மாதங்களாக இந்த பிரச்சனை கால தாமதமாகி வருகிறது ஜூன் மாதம் விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு கூட இதுவரையில் பென்ஷன் authorisation மற்றும் பென்ஷன் பட்டுவாடா செய்யப்படவில்லை.
3) Authorisation கொடுக்கப்பட்டாலும் PDA பகுதியில் பென்ஷன் பட்டுவாடா செய்வதில் காலதாமதம் நீடிக்கிறது.
ஆகவே பிரச்சனை குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்ப்பதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
3) CGHS மாறுகின்றவர்களுக்கு MAPPING சர்டிபிகேட் கடந்த இரண்டு மாத காலமாக வழங்கப்படவில்லை. நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். என்றும்
4) பெயர், பிறந்த தேதி, வங்கி கணக்கு மாற்றம் அல்லது வேறு ஏதேனும் தகவல்கள் சரி செய்யப்படுவது அனைத்தும் காலதாமதமாகி உள்ளது. இதுவும் சரி செய்யப்பட வேண்டும் என்றும்,
5) ஓய்வூதியர்கள் கடிதங்களை அனுப்புவதற்கும், DLC தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் WhatsApp நம்பர் சேவை ஓய்வூதியர்களுக்கு தரப்படும் என்று பல மாதங்களுக்கு முன்பாக நிர்வாகம் கூறி இருந்தது. ஆனால் இதுவரை அது அமுல்படுத்தப்படவில்லை. அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
6) CCA அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை நிறைய இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக அலுவலகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. கான்ட்ராக்ட் முறையில் நியமனம் செய்யப்பட்டவர்கள் பலர் தற்போது பணியில் இல்லை. அதிகாரிகளும் பல்வேறு பணிகளுக்காக அனுப்பப்படுகிறார்கள். இதே நிலைமையில் தான் அங்கு இருக்கக்கூடிய ஊழியர்களுக்கும் மற்ற அலுவலகங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் .
ஆகவே பென்ஷன் மற்றும் PDA பகுதிகளில் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது காலதாமதம் ஆகிறது. மேலும் சில நேரங்களில் ஓய்வூதியர்களுக்கு நேரிலும், தொலைபேசியிலும் பதில் சொல்வதற்கு கூட ஊழியர்கள் இல்லை என்பதே சூழ்நிலை.
CCA அலுவலகத்தின் Justified ஊழியர்கள் எண்ணிக்கை என்பது குறைக்கப்பட்டு கொண்டே வருகிறது. இதனை சரி செய்து நிர்வாகம் DOT/CGCA மட்டத்தில் அதிகப்படியான ஊழியர் நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவாதித்துள்ளோம்.
இந்த பிரச்சனைகளை நாமும் நம்முடைய தரப்பிலிருந்து DOT/CGCA அதிகாரிகளிடம் பேசுவோம் என்று கூறியிருக்கின்றோம்.
7) மேலும் CCA அலுவலகத்தில் இப்போது ஐம்பத்தி மூன்று ஆயிரத்திற்கும் (53,000) அதிகமான ஓய்வூதியர்களுக்கு பென்சன் பட்டுவாடா செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே மிக அதிகப்படியான ஓய்வூதியர்ளைக் கொண்ட ஒரு அலுவலகமாக தமிழ் நாடு CCA அலுவலகம் தான் இருக்கிறது.
எனவே இதனை தமிழ்நாட்டினுடைய இரண்டு அல்லது மூன்று பகுதிகளுக்கு பிரிப்பதற்காக நம்முடைய ஆலோசனை முன்வைத்து இருக்கின்றோம். கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு CCA அலுவலகத்தில் உடைய கிளை அலுவலகங்களை உருவாக்கினால் அந்த பகுதி அருகிலுள்ள ஓய்வூதியர்கள் நேரடியாக சென்று தங்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் .
சில மாநிலங்களில் இது போன்று கிளை அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினோம். பிரச்சனைகளை விரைவாக தீர்ப்பதற்கு இது உதவி செய்யும் என்கின்ற ஆலோசனையை முன்வைத்து இருக்கின்றோம்.
8) பேச்சுவார்த்தையின் போது, ஒவ்வொரு BSNL GM அலுவலகத்திலும் CCA அலுவலக ஓய்வூதியர்ப ணிகளுக்காக ஒரு அதிகாரி அல்லது ஊழியர் நியமிக்கப்படுவது என்கின்ற கருத்தும் முன் வந்திருக்கிறது.
இதுவும் நல்ல ஆலோசனை தான்.
மாவட்ட மட்டத்திலேயே பிரச்சனைகள் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதலுக்காக மட்டும் CCA அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றால் Documents சரிபார்ப்பதற்காக ஏற்படும் காலதாமதம் குறையும். பிரச்சனைகள் விரைவில் தீர வழி காணப்படும் என்கின்ற கருத்தையும் விவாதித்து உள்ளோம்
நம்முடைய மாநாட்டில் CCA அலுவலக பிரச்சனைகள் மிக தீவிரமாக பேசப்பட்டதையும் அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றோம்.
பிரச்சனைகளை முறையாக தீர்ப்பதாக Pr.CCA அவர்கள் உறுதியளித்து இருக்கின்றார்கள். நமது ஆலோசனைகளையும் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார். பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். பிரச்சனைகள் தீர வில்லை, எனில் மாநில மாநாட்டு முடிவின் அடிப்படையில் அதற்கான போராட்டத்தை மாநிலச் சங்கம் அறிவிக்கும்.
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்.
25.1.25
0 Comments