Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை 8/25.... dt.30.1.25

  AIBDPA TN சுற்றறிக்கை 8/25.... dt.30.1.25

மாநில மையக் கூட்டம் - 30 1 2025 - முடிவுகள்

தோழர்களே ! 

                   தமிழ் மாநில AIBDPA சங்கத்தின் முதல் மையக் கூட்டம் 30-01-2025 அன்று சென்னை கிரீம்ஸ் ரோடு  BSNLEU சங்க அலுவலகத்தில்  நடைபெற்றது. மாநிலச் செயலர் தோழர். ஆர். ராஜசேகர் மாநில அமைப்பு செயலாளர் தோழர் A. ஆரோக்கிய நாதன், மாநில துணைச் செயலர் தோழியர் பெர்லின் கனகராஜ், மற்றும் காணொளி மூலமாக மாநில தலைவர் தோழர் C.ஞானசேகரன் மாநில பொருளாளர் தோழர் A.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஏழாவது மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது. 

✳️ ஜனவரி மாதம் ஓய்வூதியர்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்கின்ற மத்திய  சங்க முடிவின் அடிப்படையில் பல மாவட்டங்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஓய்வூதியர்களை சந்தித்து இயக்கத்தை மிகச் சிறப்பாக செய்து வருகின்றன. அந்த மாவட்டங்களுக்கு மாநில சங்கத்தின் சிறப்பு பாராட்டுக்கள்💐

       சில மாவட்டங்களில் இன்னும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே அனைத்து மாவட்டங்களும் பிப்ரவரி 10 ம் தேதிக்குள் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கத்தை முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும்.

(மாவட்டங்களின் செயல்பாடுகள் பற்றி அறிக்கை பின்னர் முழுமையாக வெளியிடப்படும்)

✳️ சங்க பத்திரிக்கை வெளியிடுவது தொடர்பாக ஐந்து ஆண்டு சந்தா ரூபாய் 500/- ஒவ்வொரு உறுப்பினரிடம் வசூலிக்கப்பட வேண்டும்.  இந்த பணியை பிப்ரவரி, மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். பத்திரிகையின் பெயர், ஆசிரியர் குழு போன்ற விபரங்கள் உறுப்பினர்களின் ஆலோசனைகளின் படி முடிவெடுக்கப்படும்.

ஓய்வூதியர் முழக்கம், ஓய்வூதியர் குரல், ஓய்வூதியர் தோழன் ஆகிய பெயர்கள் விவாதத்திற்கு வந்துள்ளன. 

 பிப்ரவரி மாதத்திற்குள் பத்திரிகை வேலைகள் முடிக்கப்பட்டு முதல் இதழ் வெளியிடப்பட வேண்டும்.

நமது AIBDPA  சங்கத்தின் வரலாறு மற்றும் பணிகளை பதிவு செய்யும் விதமாக கட்டுரைகளை எழுதுவதற்கு தோழர் S மோகன் தாஸ் VP CHQ மற்றும தோழர் CKN மாநில ஆலோசகர் ஆகிய தோழர்களை கேட்டுக்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பத்திரிக்கையை பதிவு செய்வதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

✳️ சங்கத்தின் நிதி நிலைமையை வலுப்படுத்த ஆண்டுதோறும் 200/- ரூபாய் வீதம்  உறுப்பினர்களிடம் இருந்து நன்கொடையாக வசூலிக்கப்பட வேண்டும்.

இதில் மாநிலச் சங்கத்திற்கு ரூ 120/, மாவட்ட சங்கத்திற்கு ரூ.40/, கிளை சங்கத்திற்கு ரூ 40/ என பிரிக்கப்பட வேண்டும். 

✳️ மாநில அளவில் 9 பெண் தோழர்களை கொண்டு அமைக்கப்பட்ட பெண்கள் குழுவை விரிவாக்கம் செய்யும் விதமாக, அனைத்து மாவட்டங்களிலும் இருந்து ஒரு பெண் தோழியரை தேர்ந்தெடுத்து இந்த குழுவிலே இணைக்க வேண்டும். பிப்ரவரி மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு பெண்கள் கிளை உருவாக்கப்பட வேண்டும் 

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி அனைத்து மட்டங்களிலும் கருத்தரங்கங்கள்/ கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். 

✳️ எப்போதும் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நமது சங்க செயல்பாடுகளை உடனுக்குடன் நோட்டீஸ் மூலமாகவும், பேனர்கள் மூலமாகவும் தெரியப்படுத்த ஒரு சமூக வலைதள குழுவை உருவாக்க வேண்டும். இதற்கு ஆர்வமுள்ள, தகுதியான தோழர்களை மாவட்ட சங்கங்கள் மாநில சங்கத்திற்கு  தெரிவிக்க வேண்டும். 

மிகச் சிறப்பாக திருச்சியில் நடைபெற்ற மாநாட்டு முடிவுகளின் அடிப்படையில்  இந்த முடிவுகள்  மாநில மையக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. 

பிப்ரவரி முதல் வாரத்தில் ஆன்லைன் மூலமாக மாநில செயற்குழு கூட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இம்முடிவுகளை முழுமையாக அமல்படுத்த மாவட்டச் செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள் முன் கை எடுக்க வேண்டுமென தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்,
R. ராஜசேகர்,
மாநில செயலர்,
AIBDPA TN.
30.1.25

Post a Comment

0 Comments