AIBDPA TN
நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் LPD பிரச்சினை குறித்து மாநில சங்கம் கடிதம்
தோழர்களே,
25 ஆண்டுகளுக்கு முன்பு நமது குரூப் D தோழர்கள் போன் மெக்கானிக் தேர்வு தேர்ச்சி பெற்று, காலியிடங்கள் இல்லாத காரணத்தினால் லைன் மேன் சம்பளத்தில் நியமிக்கப்பட்டு, பிறகு போன் மெக்கானிக் ஆன பிறகு அதே சம்பள அடிப்படையில் போன் மெக்கானிக் சம்பளம் தீர்மானிக்கப்பட்டது.
அவர்கள் ஓய்வு பெறுகின்ற பொழுது அவர் அடிப்படை ஊதியத்தில் ஒரூ இன்கிரிமெண்ட்ஐ CCA அலுவலகம் தன்னிச்சையாகவும், சுமார் 500 பேருக்கு மட்டும் பாரபட்சமாகவும் பிடித்து பென்ஷன் வழங்கி வருகிறது.
. இதுகுறித்து பல அதாலத்களிலும், பல கடிதங்கள் மூலமாகவும், பல தனிநபர்கள் கடிதம் மூலமாகவும் பிரச்சனை பேசப்பட்டு வந்தாலும் இதுவரையில் அது தீர்க்கப்படவில்லை. ஆகவே இந்த பிரச்சனையில் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என மாநில சங்கம் கடிதம் Pr.CCA அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
மாநிலச் செயலாளர்
31 1 25
0 Comments