AIBDPA Vellore கிளையின் சிறப்பு கூட்டம்
AIBDPA Vellore கிளையின் சிறப்புக் கூட்டம் இன்று 01-01-2025 காலை 10.00 மணி அளவில் BSNLEU சங்க அலுவலகம் அருகில் இனிதே நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிளையின் தலைவர் தோழர். M.வேல்முருகன் அவர்கள் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் G.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார்.
இந்தக் கூட்டத்தில்,மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த தோழர். C. ஞானசேகரன் அவர்களுக்கு கிளையின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. மேலும் BSNLEU மாவட்ட செயலாளர் தோழர். B.மாரிமுத்து அவர்களும், AIPRA மாவட்டச் செயலாளர் தோழர். A.கதிர் அஹ்மத் அவர்களும், மூத்த தோழர் அலி முஹம்மது அவர்களும் மாநிலத் தலைவர் C.ஞானசேகரன் அவர்களுக்கு பொன் னாடை போர்த்தி கௌரவித்தனர்.
நமது புதிய மாவட்ட செயலாளர் தோழர். P.முருகன் அவர்களுக்கும், மாவட்டப் பொருளாளர் தோழர். P.லோகநாதன் அவர்களுக்கும், கௌரவத் தலைவர் தோழர். V.ஏழுமலை அவர்களுக்கும், மாவட்ட உதவி செயலாளர் தோழர். P. ஸ்ரீதரன் அவர்களுக்கும் கிளையின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டது.
இக் கூட்டத்தில் தலைவர்கள் அனைவரும் BSNLன் இன்றைய நிலைமை, ஊதிய மாற்றம், ஓய்வு ஊதிய மாற்றம் குறித்து விவாதித்தனர். கூட்டத்தின் முடிவில் நன்றி உரையாக கிளைச் செயலாளர் G.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. கூட்டத்தில் இரண்டு பெண் தோழர்கள் உட்பட சுமார் 40 தோழர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments