Latest

10/recent/ticker-posts

இந்த பணி நம்மால் மட்டுமே முடியும் AIBDPA சாதனை !!!

 இந்த பணி நம்மால் மட்டுமே முடியும் - AIBDPA சாதனை !!!

நமது AIBDPA  சங்கத்தின் சாதனை !!  

2010ல் சங்கம் தொடங்கப்பட்ட சமயத்தில் நம்மிடம் வந்த பிரச்சினை கோரிக்கை......

  தோழர். வி. மூர்த்தி Rtd TT Nagercoil - இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதன் அடிப்படையில் சிறைத்தண்டனை உட்பட.....நீதிமன்றம் தோழரை நிரபராதி என தீர்ப்பு வழங்கி அவருடைய அனைத்து தண்டனையும் ரத்து செய்தது. தோழருக்கு BSNL absorption வழங்கப் படாததால் அவருக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு உரிய சம்பளம் மற்றும் பென்சன் CDAவில் வழங்கப்பட்டது.

           நமக்கு பென்சன் IDAவில் வழங்கப்படுகிறது. CDA பென்சன் IDA பென்சனை விட குறைவு. அன்றைய மாவட்ட செயலாளர் அ. மீனாட்சி சுந்தரம் இந்த பிரச்சனையை எடுத்து மாநில சங்க உதவியோடு அகில இந்திய சங்கத்தை அணுகி 2017லில் BSNL சேருவதற்குரிய presidential orderரை நமது தலைவர் தோழர் VAN. நம்பூதிரியும் மற்றும் பொதுசெயலாளர் தோழர். K G ஜெயராஜும் மிக கடுமையான முயற்சி செய்து பெற்று கொடுத்தனர். இதற்கு அன்றைய மாநில செயலாளர்கள் தோழர்.C K நரசிம்மன் மற்றும் தோழர். N குப்புசாமி பெரிதும் முயற்சி செய்தனர்.

          இந்த பிரச்சினை இன்றைய மாநில செயலாளர் தோர். R ராஜசேகரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாநில ‌ செயலாளரும், மாவட்ட செயலாளரும் பிரச்சினை தீர பெரும் முயற்சி செய்தனர். 2017ல் போடப்பட்ட Presidential order 2023வரை Implement (அமுல்படுத்தப்படாமல்) செய்யாமல் நாகர்கோவில் மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்து 2023ல் மாவட்ட செயலாளர் தோழர். க. ஜார்ஜ் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் தோழர். B. கணபதியா பிள்ளை இது சம்பந்தமாக நிர்வாகத்தை அணுகினர்.

      நாகர்கோவில் மாவட்டநிர்வாகம் தோழர். மூர்த்தியின் Service bookல் முறையான Entry இல்லை என்றும் APAR இல்லை என்றும் தெரிவித்தது. இதனை பாதுகாக்க வேண்டியது நிர்வாகத்தின் வேலை என்றும் அழுத்தம் கொடுத்த பின்னணியில் CDA to IDA பென்சன் மாற்றம் வேண்டிய வேலையை நிர்வாகம் செய்ய தொடங்கியது. பல்வேறு முட்டுக்கட்டைகளை தாண்டி இரண்டு நாட்கள் முன்பு IDA மாற்றம் உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கு பெரும் பங்கு வகித்தவர் மாநில செயலாளர் தோழர். R ராஜசேகர். 

         முதல் (நிலுவைத்தொகை) payment DCRG difference 64000/- 

         அடுத்த  (நிலுவைத்தொகை) Commutation difference 89000/-

தோழரின் மனைவி ராணி பெற்றுள்ளார். பென்சன் வித்தியாசம் இனியும் வர வேண்டி உள்ளது. இதற்கு பங்களிப்பு செய்த மத்திய மாநில சங்க தலைவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

ஆம்.... இந்த பணி நம்மால் மட்டுமே முடியும் !!!

க ஜார்ஜ் மாவட்ட செயலாளர் நாகர்கோவில்

Post a Comment

0 Comments