எழுச்சியுடன் நடைபெற்ற மதுரை AIBDPA 6வது மாவட்ட மாநாடு-16-2-2025
தோழர்களே ! வணக்கம்.
நாம் முன்பே அறிவித்தபடி இன்று ( 16.2.2025 ) நமது மதுரை மாவட்ட AIBDPA 6வது மாவட்ட மாநாடு சீரும் சிறப்புமாக மதுரை GM அலுவலக மனமகிழ்மன்றத்தில் தோழர். N. உத்தரகுமார், மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது. நமது மாநிலச் செயலர் தோழர்.R. ராஜசேகர் அவர்கள் சிறப்பு அழைப்பளாராக பங்கேற்றார். சரியாக காலை பத்து மணியளவில் நமது தேசியக் கொடியை மாநிலச் செயலர் ஏற்றி வைத்தார். நமது சங்கக் கொடியை மாவட்டத் துணைத் தலைவர் தோழர். P. கணேசன் அவர்கள் ஏற்றி வைத்தார். விண்ணதிர கோஷங்கள் முழக்கத்துடன் தோழர்கள், மறைந்த தோழர். N.C. ஆதீஸ்வரன் நினைவரங்கத்தில் கூடியவுடன், தலைவர். உத்தரகுமார் மாநாட்டை முறையாக தொடங்கி வைத்தார்.
சுமார் 35 தோழியர்கள் உள்பட 130 தோழர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் மாநில செயலர் தோழர்.R. ராஜசேகர் உரை மிகவும் சிறப்பாக இருந்தது. பென்ஷன் திட்டத்தையே அழித்து விட வேண்டும் என சில தனியார் முதலாளிகள் பேசி வருவதையும், அதை மைய அரசும் மவுனமாக ஆதரிப்பத்தையும் எடுத்துக் கூறி நாம் போராடத் தயாராக வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தொழிலாளர் வர்க்கத்தை அழிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு AI தொழில் நுட்பம் மூலம் கார்பரேட் முதலாளிகள் முயலுவதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
பென்ஷன் ரிவிஷன் குறித்து நமது சங்கம் நடத்திய வீரம் செரிந்த போராட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார். நமது தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக மெடிக்கல் அலவன்ஸ் கிடைக்கப் பெற்றது, மூன்றாவது PRC யில் நமது சங்கம் அடைந்த முன்னேற்றம் குறித்து தெளிவாக விளக்கினார்.
மாற்று சங்கங்கள் நீதி மன்ற படியேறியபோதும் நாம் போராட்ட உணர்வை கை விடவில்லை, தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் பென்ஷன் ரிவிஷன் பெறுவோம் என உறுதி படக் கூறினார். முடிவாக சென்னை சொசைட்டி, CGHS குறித்து நமது நிலை பாட்டை விளக்கி தனது துவக்க உரையை நிறைவு செய்தார்.
தொடர்ந்து 70 வயது நிறைவு செய்த மூத்த தோழர்களுக்கு பொன்னாடை போத்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மாவட்டச் செயலாளர் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. வரவு செலவு அறிக்கையை பொருளர் தோழர் சண்முகவேல் வாசிக்க அவை முழுமையாக ஏற்றுக் கொண்டது.
தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வை மாநிலச் செயலாளர் நடத்தினார்.
தோழர் சௌந்தரராஜன் தலைவர், தோழர் சத்யராஜ் செயலாளர், தோழர் சண்முகவேல் பொருளர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை அவை முழுமையாக ஏற்றுக் கொண்டது.* ( பட்டியல் பின் இணைப்பு ).
மத்திய மாநில சங்கங்களுக்கு பகுதி பணம் ரூபாய் 26,550 வழங்கப்பட்டது
அதன் பின் மாநாட்டை வாழ்த்தி தோழர். ஜான் போர்ஜியா ( மாநில உதவிச் செயலர் AIBDPA ), தோழர். சுந்தரராஜன் ( மாநில அமைப்புச் செயலர் AIBDPA ), தோழர். ரிச்சர்ட் ( BSNLEU மாவட்டச் செயலர் ), தோழர். சித்ராமணி ( TNTCWU மாவட்ட செயலர் ) ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இறுதியாக தோழர் சண்முகவேல் நன்றி கூற மாநாடு இனிதே முடிந்தது. வந்து இருந்த அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் இலை போட்டு அறுசுவை மதிய உணவு பரிமாறப் பட்டது. நெஞ்சம் நிறைந்த நினைவுகளோடு தோழர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.
இணைப்பு புதிய நிர்வாகிகள் பட்டியல்
தலைவர் : தோழர் M.சௌந்தரராஜ் STSO (Retd )
துணை தலைவர்கள் :
1. தோழர் P. கணேசன் STM(O)Retd
2. தோழர் P. ஜெயகிருஷ்ணன் TT Retd
3. தோழர்.S. வெங்கிடசாமி SSS o
4. தோழர்.J. காந்திமதி F/P
செயலர் : தோழர் C.செல்வின் சத்யராஜ் JE Retd
உதவி செயலர்கள் :
1.தோழர். G. சந்திரமோகன் TT Retd
2.தோழர். C. தனபால் TT Retd
3.தோழர். S. ஜோசப் ராஜ் TT Retd
4.தோழர். S. மகபூப்ஜான் STS(O) Retd
5.தோழர். S. ராஜன் TT Retd - தேனி
பொருளர் :தோழர்.R. சண்முகவேல் TT Retd
அமைப்பு செயலர்கள் :
1.தோழர். K. விஜயகுமார் SDE Retd
2.தோழர். S. சுப்பிரமணியன் SSS(O) Retd
3.தோழர். S. விஜயகுமார் TT Retd
4.தோழர்.S. பாலு STS(O) Retd
5.தோழர் G.செந்தில்குமார் TT Retd
தணிக்கையாளர் : தோழர் G. மனோகரன் SS(O) Retd
தோழமையுடன்
C. செல்வின் சத்தியராஜ் DS AIBDPA மதுரை,
0 Comments