திருச்சியில் சிறப்பாக நடைபெற்ற AIBDPA-7வது தமிழ்மாநில மாநாட்டின் வரவேற்பு குழுவிற்கு பாராட்டு விழா கூட்டம்
தோழர்களுக்கு வணக்கம்!
22 2.2025 சனிக்கிழமை மதியம் 12 மணி அளவில், நடந்து முடிந்த ஏழாவது தமிழ் மாநில மாநாட்டில், சிறப்பாக பணியாற்றிய வரவேற்பு குழு தோழர்களுக்கு திருச்சியில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவிற்கு வரவேற்பு குழுவின் செயல் தலைவர் தோழர் I. ஜான் பாட்ஷா அவர்கள் தலைமையேற்று நடத்தினார். வரவேற்பு குழு பொதுச்செயலாளர் தோழர். A.இளங்கோவன் அவர்கள் மாநில மாநாட்டில் வரவேற்பு குழு ஆற்றிய பணிகளையும், அதன் சிறப்பையும் விளக்கி பேசினார்.
அதைத்தொடர்ந்து மாநில மாநாட்டின் வரவேற்பு குழு தலைவர் தோழர். S. ஸ்ரீதர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மாநில செயலாளர் தோழர். R.ராஜசேகர் அவர்கள் வரவேற்பு குழு தோழர்களை பாராட்டி சிறப்புரையாற்றி, நினைவு பரிசு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து BSNLEU முன்னாள் மாநில பொருளாளர் தோழர் S.அஸ்லாம் பாட்ஷா அவர்கள், BSNLEU முன்னாள் திருச்சி மாவட்ட செயலாளர் தோழர். G.சுந்தர்ராஜ், NCCPA மாவட்ட செயலாளர் தோழர். N.கோபால்சாமி அவர்கள், AIPRPA மாவட்ட செயலாளர், தோழர். மருதநாயகம், தோழர். தண்டபாணி, தோழர். TP சிவசுப்பிரமணியன் ஆகியோரும் வரவேற்பு குழுவை பாராட்டி பேசினார்கள்.
மாநில மாநாட்டின் வரவு செலவு கணக்குகளை வரவேற்பு குழு பொருளாளர் தோழர். L.அன்பழகன் அவர்கள் சமர்ப்பித்தார்.
🌹மாநில சங்கத்திற்கு நன்கொடையாக (90,,000) ரூபாய் 90 ஆயிரம் மாநில சங்கத்திற்கு🌹திருச்சி மாநில மாநாட்டின் வரவேற்பு குழு தலைவர் தோழர். S. ஸ்ரீதர் அவர்கள், மாநில செயலாளரிடம் வழங்கினார்.
இறுதியாக வரவேற்பு குழு தோழர். A. சண்முகம் அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
வரவேற்பு குழு பொதுச் செயலாளர் A.இளங்கோவன்
திருச்சி🙏
0 Comments