AIBDPA TN சுற்றறிக்கை 10/25......dt.11.02.2025
சென்னை CGM அலுவலகத்தில் GM (HR)திரு. துளசிராமன் அவர்களுடன் சந்திப்பு 10.2.25
தோழர்களே,
GM(HR) திரு. துளசிராமன் அவர்களை மாநில சங்கத்தின் சார்பில் 10.2.25 அன்று மாநிலச் செயலர் தோழர் R.ராஜசேகர், மாநில அமைப்புச் செயலர் தோழர் A.ஆரோக்கியநாதன், தோழர் R.சீனிவாச ராகவன் ஆகியோர் சந்தித்து கீழ்க்கண்ட பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம்.
1) திருச்சி மாவட்டத்தில் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மெடிக்கல் ஆப்ஷன் மாற்றி கொடுக்கும் பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. 2 கடிதங்கள் கொடுத்து CGM வரை விவாதித்து இருக்கின்றோம். எனினும் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. மீண்டும் இந்த பிரச்சனையை விவாதித்தோம். தீர்த்து வைப்பதாக மீண்டும் உறுதி அளித்துள்ளார்கள். இதுதொடர்பாக CGM அவர்களுக்கு கடிதம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
2) ஒவ்வொரு காலாண்டுக்கான மெடிக்கல் பணம் பட்டுவாடா.
24-25 நிதி ஆண்டில் 3வது காலாண்டுக்கான பணம் சில மாவட்டங்களில் சரியாக பட்டுவாடா ஆகவில்லை. என்கின்ற புகார் மாநிலச் சங்கத்தின் வந்திருக்கிறது.
இது குறித்து நாம் பரிசீலனை செய்தோம். உதாரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் ERPல் அப்டேட் செய்யப்பட்ட 861 பேர்களில் 100 பேருக்கு மட்டும்தான் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 761 பட்டுவாடா செய்யப்படவில்லை.
இது குறித்து நாம் ஆராய்ந்த பொழுது முதல் 100பில்கள் முதலாவதாக அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பில்கள் இடைவெளி விட்டு Update செய்யப்பட்டுள்ளன.
எனவே15 நாட்களுக்கு முன்பாகவே மாவட்டங்கள் மெடிக்கல் பில் சம்பந்தமான தகவல்களை முழுமையாக ERPயில் அப்டேட் செய்ய வேண்டும். அப்போது தான் நிதி முறையாக ஒதுக்கப்பட்டு அனைவருக்கும் நிதி பட்டுவாடா செய்யப்படும் என்று விவரித்து இருக்கின்றோம். GM(HR)ம் இதனை ஏற்றுக்கொண்டு இதற்கான வழிகாட்டுதல் அனைத்து மாவட்டங்களுக்கும் தரப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
3) கேன்சர் போன்ற Cronic வியாதிகளுக்கு outdoor treatment க்கு கூடுதலாக நிதி கேட்டு உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் எனில் அதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மருத்துவரின் பரிந்துரை கடிதம் கொடுத்து மாவட்ட மட்டத்தில் அதன் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.
ஆகவே இது போன்ற பிரச்சனை உள்ள தோழர்களுக்கு ட்ரீட்மென்ட்கான சீலிங்கை உயர்த்துவதற்கு மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
4) அடுத்து Notional இன்கிரிமெண்ட் தொடர்பாக விவாதித்தோம்.
CATல் தீர்ப்பு பெற்றவர்களின் பொதுவான பட்டியல் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு Pr.CCA அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல் தரப்பட்டிருக்கிறது. ஆகவே நம்முடைய தோழர்கள் மாவட்ட நிர்வாகத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம்முடைய தோழர்கள் ஜனவரி மாத பென்ஷன் Statement மற்றும் PPO நகல்களை கையில் வைத்திருக்க வேண்டும். நிர்வாகம் கேட்கும் பட்சத்தில் அதனை கொடுக்க வேண்டும்.
STP& STR பகுதியில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
5) வழக்கு தொடராமல், Notional Increment தகுதி இருப்பவர்களுக்கு நிர்வாகம் அடுத்து நடவடிக்கை எடுக்கும்.
6) VRS-2019 ல் சென்ற தோழர்களுக்கு நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக பெறப்பட்டு இருந்தாலும், VRSல் செல்லும்போது Ex-gratia பெற்று விட்ட காரணத்தால் double benefits கிடையாது என்று கூறி, Notional Increment அமுல் ஆகாது என BSNL Corporate நிர்வாகம் நிலை எடுத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக வழக்கு கொடுக்கப்பட்ட இருப்பதாகவும் நமக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. எனவே அதுவரை அந்த தோழர்கள் காத்திருக்க வேண்டும்.
7) Coimbatore ல் Local officiating பார்த்த 5 Accounts Officer களுக்கு சம்பளம் மற்றும் Allowance அரியர்ஸ் பட்டுவாடா பிரச்சினை தொடர்பாக PGM (நிதி) அவர்களுக்கு கடிதம் கொடுத்து இருக்கின்றோம். அவர் விடுப்பில் இருக்கின்ற காரணத்தினால் அவருடன் பேச முடியவில்லை. அவர்கள் பணிக்கு திரும்பும் பொழுது அவருடன் இப்பிரச்சனையை விவாதிப்போம்.
இந்தப் பேட்டியின் போது AGM (Welfare & Legal) திருமதி. மல்லிகா முரளி அவர்களும் உடன் இருந்தார்கள்.
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்.
11.2.25
0 Comments