Latest

10/recent/ticker-posts

  AIBDPA TN  சுற்றறிக்கை 11/25....dt.14.02.2025

சிறப்பாக நடைபெற்ற முதல் மாநில செயற்குழு கூட்டம் 14-2-25 இணைய வழியாக

              நமது மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் Google Meet இணைய வழியாக 14.2.25 அன்று மாநிலத் தலைவர் தோழர் C.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது. 

              அகில இந்திய அமைப்பு செயலாளர் தோழர். வி. வெங்கட்ராமன் அவர்கள் செயற்குழுவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சர்வதேச, தேசிய நிலைமைகள், BSNL அரங்கத்தில் நம்முடைய ஓய்வூதியம் சம்பந்தமான பிரச்சினைகள், BSNL MRS, மகாராஷ்டிரா எஸ்சி எஸ்டி தோழர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாதது, ஓய்வுதியர் சந்திப்பு இயக்கம், டெலி பென்ஷனர் இவற்றையெல்லாம் குறித்து விளக்கமாக உரையாற்றினார். 

40 தோழர்கள் கலந்து கொண்ட செயற்குழுவில் 15 மாவட்ட செயலர் உள்பட 26 தோழர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள். 

         மத்திய சங்க துணைத் தலைவர் தோழர் S. மோகன்தாஸ், துணைப் பொருளாளர் தோழியர். வி.சீதாலட்சுமி, மாநில ஆலோசகர் தோழர். C.K. நரசிம்மன் ஆகியோர் செயற்குழுவில் வாழ்த்துரை வழங்கினார். 

.           சுமார் மூன்று மணி 45 நிமிடங்கள் நடைபெற்ற, இந்த செயற்குழு கூட்டம் பல்வேறு விஷயங்களை ஆழமாக விவாதித்து தகுந்த முடிவுகளை எடுத்து இருக்கின்றது. 

விவாதிக்கப்பட்ட விஷயங்களும் எடுக்கப்பட்ட முடிவுகளும்

1) மத்திய சங்க அறைகூவலுக்கு இணங்க ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம். தமிழகத்தில் இந்த இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்று உள்ளது. 

கோயம்புத்தூர், ஈரோடு, சேலம்,வேலூர்,திருநெல்வேலி, கடலூர், சென்னை, தர்மபுரி நாகர்கோயில், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த இயக்கம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் இயக்கம் தாமதமாக துவங்கினாலும் பயனுள்ளதாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. 

இதில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வீடுகளில் சென்று சந்தித்து இருக்கிறார்கள். 

நூற்றுக்கும் மேற்பட்ட Telepensioner சந்தா வசூலிக்கப்பட்டு இருக்கின்றது. பல ஆயிரம் ரூபாய்கள் நன்கொடையாக, சந்தா வசூலாக வசூலிக்கப்பட்டு இருக்கின்றது. 

வீடுகளுக்கு சென்ற பொழுது ஓய்வூதியர்கள் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று உபசரித்து அனுப்புவதும், பிரச்சினை உள்ள இடங்களில் அவர்கள் தங்களுடைய பிரச்சனைகளை நம்மிடம் பகிர்ந்து கொள்வதும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது. 

கொல்லிமலையில் சென்று உறுப்பினர்களை சந்திப்பது, அதேபோல் கேரள எல்லையில்(பாலக்காடு) இருக்கக்கூடிய ஊழியர்களை பல மைல்கள் பயணித்து பார்ப்பது என்பதும் உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயங்கள். 

இந்த ஓய்வுதிய சந்திப்பு இயக்கம் ஒரு மாதம் இரண்டு மாதம் என்று இல்லாமல் இது தொடர்ந்து நடைபெறவேண்டும் என்றும், இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வுதியர் சந்திப்பு இயக்கம் நடைபெற வேண்டுமென்றும் தோழர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.  

நாம் நமக்கு தொடர் பணியில் இருக்கின்ற காரணத்தினால் ஒரு கட்டத்தில் முடித்துக் கொண்டு அடுத்த பணிக்கு செல்ல வேண்டும். 

ஆயினும் ஆண்டுதோறும் இதனை நடத்துவதற்கு நாம் திட்டமிடுவோம்.  

2) சங்க பத்திரிக்கையினை இரண்டு மாதத்துக்கு ஒரு பத்திரிகை என கொண்டு வருவது, 

மாநிலச் செயலர் R.ராஜ சேகர் ஆசிரியராக செயல்படுவார். நம்மிடம் பத்திரிகை நடத்தும் அனுபவம் கொண்ட தோழர் V.வெங்கட்ராமன், தோழியர் P. இந்திரா போன்ற தோழர்களை ஆசிரியர் குழுவாக எடுத்துக்கொள்வது என்றும், அனுபவமிக்க தோழர்கள் தங்களுடைய கட்டுரைகளை, தகவல்களை மாநில சங்கத்தோடு  பகிர்ந்து கொண்டால் அதை சங்க இதழில் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும்  என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்குப் பெயர் ஓய்வூதியர் முழக்கம் என்று பெயரிடலாம். இன்னும் சிறந்த பெயர்கள் சொன்னால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 

5 ஆண்டு சந்தாவாக  ரூபாய் 500 வசூலிக்கப்பட வேண்டும். 

முதல் இதழை மார்ச் மாதத்துக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். 

3) அதேபோல் ஆண்டு நன்கொடையாக ரூபாய் 200 வசூலிப்பது, மாநிலம், மாவட்டம், கிளைகளுக்கு ரூ120,ரூ40,ரூ40 பிரி்த்து அளிக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

4) ஓய்வூதியர் மகளிர் அமைப்பு* விஸ்தரிப்பது, என்றும் அனைத்து மாவட்டங்களில் கிளைகள் உருவாக்குவது, 

உடனடி கடமை மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பத்து நாட்களுக்கு  மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, என்றும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. 

இதற்கு மாவட்ட சங்கங்கள் முன் கை எடுத்து செயல்பட வேண்டும் என்று வழி காட்டப்பட்டுள்ளது. 

5) CCA அலுவலகத்தில் பிரச்சனை காலதாமதம்

மாவட்ட சங்கங்கள் தங்கள் மாவட்டத்தில் நிலுவையில் இருக்கும் பிரச்சினைகளை உடனடியாக கடிதம் வாயிலாக JT.CCA அவருக்கு அனுப்புவது என்றும் நகல் மாநிலச் சங்கத்திற்கு அனுப்பவேண்டும். அனைத்து மாவட்ட பிரச்சனைகளையும் இணைத்து மாநிலச் சங்கம் CCA நிர்வாகத்திற்கு கடிதம் எழுதும். 

இந்த பிரச்சனைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்க்கப்படவில்லை என்றால் மாநிலச் சங்கம் அதற்கான போராட்ட நடவடிக்கையில் தீர்மானிக்கும். 

6) CGM அலுவலகத்தில் BSNL MRS சம்பந்தமான பிரச்சினைகள்

மாவட்ட மட்டத்தில் அலவன்ஸ் மற்றும் மெடிக்கல் பில்கள் ERPயில் Update ஆவதை நாம் முறையாக கண்காணிக்க வேண்டும். 

மாநிலச் சங்கமும் மாநில நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி மாவட்டங்களுக்கு இது தொடர்பான வழிகாட்டுதல் தரவேண்டும் என்றும் வலியுறுத்தப்படும்.

7) MRS கார்டு Revalidation தொடர்பாக பிஎஸ்என்எல் கார்ப்பரேட் அலுவலகம்  உத்தரவு வெளியிட்டுள்ளது.

 நேரில் வரமுடியாத ஓய்வூதியர்கள் தங்களுடைய DLC கொடுப்பதன் மூலமாக அதை செய்து கொள்ளலாம். 

8) மெடிக்கல் கார்டுகள் காணாமல் போவது தொடர்பாக, காணாமல் போனவர்களுக்கு புது கார்டு தருவது தொடர்பாக மாநில நிர்வாகத்துடன் நாம் விவாதிப்போம். 

9) CGHS மாறி சென்றவர்களுக்கு மீண்டும் பிஎஸ்என்எல் MRSஐ பயன்படுத்திட வருவதற்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்ற கோரிக்கை வந்திருக்கிறது. இது தொடர்பாகவும் மாநிலச் சங்கம் முயற்சி செய்யும். 

10) BSNL COC  ஒருங்கிணைப்புக் குழு கிளை மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும்  என்று கோரிக்கை வந்திருக்கிறது. இது மாநில COCயில் விவாதிக்க வேண்டிய விஷயம் என்று நாம் சொல்லி இருக்கிறோம்.

11) மாநிலச் சங்க அலுவலகம் பல்லாவரம் அலுவலகத்தை முழுமையாக பயன்படுத்துவது  தொடர்பாக 

மாநிலச் சங்கம் அதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் அந்த அலுவலகத்தை முழுமையாக நாம் பயன்படுத்துவோம். 

12) சென்னை சொசைட்டி தொடர்பாக

Additional ரிஜிஸ்டர் திருமதி. பிருந்தா அவர்களை சந்தித்து பேசியிருக்கிறோம். நீதிமன்ற வழக்கு தொடர்பாகவும் நம்முடைய வழக்கறிஞருக்கு கூடுதல் நிர்பந்தம் கொடுத்து வழக்கை  விசாரணைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். 

தோழர்களே, 

     மாநில செயற்குழு கூட்டம் மிக சிறப்பான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. தோழர். A. இளங்கோவன் மாநில பொருளாளர் நன்றி கூற கூட்டம் சிறப்பாக முடிந்தது. 

          முடிவுகளை உடனடியாக அமுல் ஆக்குவதற்கு மாவட்டச் செயலாளர்கள், மாநில சங்க நிர்வாகிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். 

வாழ்த்துக்களுடன் R.ராஜசேகர் 
மாநில செயலாளர்
14.2.25

Post a Comment

0 Comments