AIBDPA TN சுற்றறிக்கை 12/25 dt.21.02.2025
PGM( நிதி) திருமதி கீதாஞ்சலி அவர்களுடன் சந்திப்பு.
தோழர்களே
மாநில சங்கத்தின் சார்பில் PGM (நிதி) திருமதி கீதாஞ்சலி அவர்களை 21.2.25 அன்று மாநிலச் செயலர் தோழர். R.ராஜசேகர், மாநில அமைப்பு செயலாளர் தோழர். A.ஆரோக்கிய நாதன், தோழர். R. சீனிவாசராகவன் ஆகியோர் சந்தித்து கீழ்க்கண்ட பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம்.
1) கோயம்புத்தூர் பகுதியில் ஐந்து கணக்கு அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய PAY FIXATION நிலுவைத் தொகை குறித்து ஏற்கனவே கடிதம் கொடுத்தது இருந்தோம். அது குறித்து வினவியபோது
அப்பிரச்சனை பரிசீலிக்கப்பட்டு கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். அதனை உடனடியாக சாதகமாக தீர்த்து வைக்க கோரியுள்ளோம்.
2) மெடிக்கல் பில் & அலவன்ஸ் ERPயில் அப்டேட் செய்வது தொடர்பாக.
இது தொடர்பாக நமது கடிதத்தை நினைவு படுத்தினோம். வரக்கூடிய காலங்களில்
நிதி கால் ஆண்டுகள் (Financial Quarter) முடிவதற்கு முன்பாகவே ERPயில் அவை அப்டேட் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். பிரச்சினை உள்ள மாவட்டத்தில் பேசுங்கள் என்றார்கள். நாம் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சினை இருக்கின்ற காரணத்தினால் நிர்வாகம் ஒரு பொதுவான வழிகாட்டுதலை தர வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். அது குறித்தும் அவர்கள் DGM பைனான்ஸ்க்கு வழிகாட்டுதல் கொடுப்பதாக கூறியுள்ளார்கள்.
தோழர்களே,
கூட்டம் சுமூகமாக இருந்தது. பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறோம்.
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
21.2.25
0 Comments