AIBDPA TN சுற்றறிக்கை 12/25.... dt....23.02.2025
1) தேங்கிக் கிடக்கும்பிரச்சனைகள் குறித்து CCA அலுவலகத்திற்கு ஈ மெயில் அனுப்புவது*
தோழர்களே,
14.2.25 அன்று நடைபெற்ற நமது மாநில சங்க online செயற்குழுக் கூட்டத் தில் மாவட்டங்களில் தேங்கியிருக்கும் பிரச்சனைகள் குறித்து CCA அலுவலகத்திற்கு ஈமெயில் அனுப்புவது என தீர்மானிக்கப் பட்டுள்ளது.
அதனடிப்படையில் மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் நிலுவையில் இருக்கும் பிரச்சினைகளை திரட்டி சங்கத்தின் LETTER PADல் பிரச்சனைகள் வாரியாக டைப் செய்து
(உ.ம்)
1) குடும்ப ஓய்வூதியம் Authorisation
2) குடும்ப ஓய்வூதியம் Re-Authorisation
3) DLC update
4) DLC updateக்கு பிறகு பென்ஷன் அரியர்ஸ்
5) PPOவில் திருத்தங்கள்
6) வங்கி கணக்கு மாற்றங்கள்
இந்த அடிப்படையில் அதனை முறையாக டைப் செய்து CCA அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். நகல் மாநிலச் செயலருக்கு இமெயிலில்/ post அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இமெயில் விலாசங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
Pr.CCA-- pccatn.ccatn@nic.in
CCA-- ccatn.tn@nic.tn
Jt.CCA-- jtccapen.ccatn@nic.in
Postal address.
Jt.CCA,
Office of the controller of Communication accounts,
60, Ethiraj Salai,
Egmore,
Chennai-600008.
இந்தப் பணியினை மாவட்ட சங்கங்கள் பிப்ரவரி 28ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். மாநிலச் சங்கம் அவற்றை ஒருங்கிணைத்து கடிதமாக நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கும்.
2) பென்சன் அதாலத் மார்ச் 29. ஓசூரில்
சேலம், தர்மபுரி மற்றும் STR&STP பகுதிகளுக்கான பென்ஷன் அதாலத் Pr.CCA அலுவலகம் அறிவித்திருக்கிறார்கள்.
பிரச்சினைகள் கொடுப்பதற்கு கடைசி தேதி 28.2.25 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நிலுவையில் இருக்கும் பிரச்சினைகளையும், தமிழகம் முழுவதும் உள்ள STR STP பகுதியின் ஓய்வூதியர்கள் தங்களுடைய பிரச்சினைகளையும்
CCA அலுவலகத்திற்கு
அறிவித்துள்ள அந்த படிவத்தில் ஈமெயில் மூலமாகவோ, நேரடி அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
சங்கம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் பிரச்சனைகளை 15 column கொண்ட படிவத்தில் நிரப்ப வேண்டும். நேரடியாக கலந்து கொள்ளும் ஓய்வூதியர்கள் பத்து column கொண்ட படிவத்தை நிரப்ப வேண்டும்.
நிலுவையில் இருக்கும் அத்தனை பிரச்சினைகளையும் இந்த அதாலத்தில் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
மாநிலச் செயலாளர்
23 2 25
0 Comments