Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை 9/25...dt.05.02.2025.

 AIBDPA TN சுற்றறிக்கை 9/25...dt.05.02.2025.

Jt.CCA திருமதி. கௌதமி பாலாஸ்ரீ அவர்களோடு பேட்டி

தோழர்களே,

         இன்று 5 2 25 அன்று Jt.CCA  அவர்களை மாநிலச் சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் தோழர் R.ராஜசேகர், மாநில அமைப்புச் செயலர் தோழர். A. ஆரோக்கிய நாதன் தோழர் R.சீனிவாசராகவன் ஆகியோர் சந்தித்து கீழ்க்கண்ட பிரச்சனைக்கள் குறித்து விவாதித்தோம். 

பிரச்சனைகளும் நி்ர்வாகத்தின் விளக்கமும்

உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. 

1) CCA அலுவலகத்தை பிரிப்பது தொடர்பாக. 

           CCA  அலுவலகத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 53,000ஆக உள்ள காரணத்தால் CCA அலுவலகத்தினுடைய பகுதி அலுவலகங்களை கோயம்புத்தூர், திருச்சி மற்றும் மதுரை போன்ற பகுதிகளுக்கு மாற்றவேண்டும் என்றும் அல்லது ஒவ்வொரு GM அலுவலகத்திலும் ஒரு DOT அலுவலக அலுவலரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தோம். 

Jt.CCA அவர்களும் நம்முடைய கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு CCA அலுவலகத்தை மதுரை, கோவை போன்ற பகுதிகளுக்கு மாற்றுவதற்கு முன் முயற்சி எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். 

இது அமுலாகும்  போது நிர்வாகத்துக்கும் வேலைப்பளு குறையும். ஓய்வூதியர்களுக்கும் விரைவில் பலன் கிடைக்கும். 

2) VRS 2019, DCRG மற்றும் கம்முடேஷன் பட்டுவாடா.

தோழர்களே இதுவரை 800 விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், 3000 வரை வரும் என்றும் நமக்கு தெரிவிக்கப்பட்டது. நாம் இந்த வேலை  பளுவை செய்து முடிப்பதற்கு கூடுதலாக ஊழியர்களை ஈடுபட செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து இருக்கின்றோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும்.  

3) LPD பிரச்சனை.

AIBDPA TN ஒரு விரிவான கடிதத்தை எழுதி இருக்கின்றோம். நிர்வாகம் DOT இடமிருந்து பதிலை எதிர்பார்த்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள். 

நாம் சுமார் 500 ஓய்வுபெற்ற போன் மெக்கானிக் தோழர்கள் மாதம்தோறும் 1300 ரூபாய் இழந்து வருகிறார்கள் என்று தெரிவித்து இருக்கின்றோம். விரைவில் இதைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப் பட்டுள்ளது. 

4)ஊழியர் பற்றாக்குறை. 

தோழர்களே, 

நமது கடிதத்தின் அடிப்படையில் மத்திய சங்கமும் CGCA புது டெல்லி அவர்களுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளது. நிர்வாகம் இப்போது கூடுதலாக 18 ஊழியர்கள் நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள இலாகா ஊழியர்கள் இருந்திருந்தால் விண்ணப்பிக்கலாம்

5) குடும்ப ஓய்வூதியம். 

குடும்ப ஓய்வூதியம் காலதாமதம் ஆவது குறித்து விவாதித்தோம். 

அது சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஓய்வூதியர்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக தகவல் தர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். 

6) PDA  பகுதியில் குடும்ப ஓய்வூதியம் பட்டுவாடா காலதாமதம், DLC Update ஆன பிறகு பேமெண்ட் மற்றும் அரியர்ஸ் காலதாமதம் சரி செய்ய கோரிக்கை வைத்துள்ளோம். 

7) CGHS  மாறுவதற்கான மேப்பிங் சர்டிபிகேட் கடந்த இரண்டு மாத காலமாக காலதாமதமாவதை கூறியுள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவாதம் அளித்துள்ளார்கள்.

8) அதேபோல் Non pay corrections என்று சொல்லக்கூடிய பெயரில் எழுத்து மாற்றம், பிறந்த தேதி, போன் நம்பர், விலாசம் திருத்தம். 

இது சம்பந்தமாக காலதாமதம் அதையும் எடுத்து வைத்துள்ளோம். 

விரைவில் சரி செய்யப்படும் என உறுதி அளிக்கப் பட்டுள்ளது 

9) PAN நம்பர் கரெக்ஷன். 

HELPDESK வரை சென்றாலும் சரி செய்யப்படுவதில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்களும் இது குறித்து நாங்களும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

Sampamn Software மற்றும் HELPDESK குறைபாடுகள் விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதி எடுத்துள்ளார்கள். 

10) ஓய்வூதியர்களுக்கு DLC சம்பந்தமான தகவல்களை பெறுவதற்கு watsapp நம்பர் தரப்படும் என்று சொன்னதை ஞாபகம் படுத்தினோம். 

அமுல்படுத்தப்பட இருப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். 

சங்கங்களுக்கான வாட்ஸ்அப் குரூப் விரைவில் உருவாக்கப்படும். இதில் நம்முடைய பிரச்சனைகளை பதிவிடலாம். 

11) DOT ID CARD தொடர்பாக.

முன்பு அவுட்சோர்சிங் கொடுக்கப்பட்டு இருந்தது. 

அதில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. 

தற்போது அதற்கான இயந்திரம் CCA அலுவலகத்தில் வாங்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் ID கார்டு நாமாகவே அச்சடித்து அனைவருக்கும் தருவதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார்கள். 

தற்போது கையில் இருக்கும் ID காடுகள் அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றன. 

12) CCAஅலுவலகத்தில் Despatch  செக்ஷனில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக் காட்டியுள்ளோம். கடிதங்கள் முறையாக Sectionகளுக்கு அனுப்பப்படுவதில்லை என்று கூறினோம்.  

சரி செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளார்கள் 

13) CCAஅலுவலகத்தில் Dy CCA போஸ்ட் நிரப்பப்பட வேண்டும் எனக்கேட்டு இருந்தோம். 

இன்னும் ஒரு மாத காலத்தில் கணக்கு அதிகாரிகள் பணி மாற்றம் நடைபெற இருப்பதாகவும் அப்பொழுது சீனியர் AOக்கள் நமக்கு கிடைப்பார்கள். அதில் Senior AOவை நாம் DyCCA வாக நியமிக்கலாம் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

14) பென்ஷன் அதாலத். 

இம்முறை Core Network Transmission south ( STR&STP)  பகுதிகளுக்கான தென் மாநிலங்களுக்கான இணைந்த அதாலத் ஆன்லைன் மூலமாக நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 

15) Notional இன்கிரிமெண்ட் சம்பந்தமான பிரச்சினையை விவாதித்தோம். 

DOT மற்றும் BSNL உத்தரவுகள் அடிப்படையில் வழக்கு தொடுத்து சாதகமான தீர்வு பெற்றவர்களுக்கு தீர்ப்பின்படி  உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் 

மற்றவர்களுக்கும் 1.5.23 முதல் வழங்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்கள் DOT இடம் அமுலாக்க தேதி குறித்து விளக்கம் கேட்டு இருப்பதாக கூறி இருக்கிறார்கள். 

VRS 2019 க்கான DCRG & Commutation   பிரச்சினைக்கு பிறகு இந்த பிரச்சனை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். 

16) 2019 க்கு பிறகு உள்ள Sampann  ஓய்வூதியர்களுக்கு e-ppo வழங்கப்படும். 

17) பெயர் மாற்றம் காரணமாக DLC Update ஆகாத பிரச்சனை.

 Migration பிறகு முதன்முதலாக DLC கொடுப்பவர்களுக்கு பெயர் mismatch, பிறந்த தேதி mismatch வருகின்ற காரணத்தினால், அவர்கள் Gazatted அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி DLC சமர்ப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. 

தோழர்களே,

சுமார் ஒரு  மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்துள்ளது. 

ஊழியர் பற்றாக்குறை, CCA அலுவலகத்தின் கிளை அலுவலகங்கள் உருவாக்குவது, LPD பிரச்சனை ஆகிய பிரச்சினைகளில் சாதகமான பதில் அளித்துள்ளார்கள். 

எனினும் குடும்ப ஓய்வூதியம், DLC Updateக்கு பிறகு பணப்பட்டுவாடா ஆகிய பிரச்சனைகளில் உள்ள காலதாமதத்தை போக்க  மாநிலச் சங்கம் தொடர் நடவடிக்கை எடுக்கும். 

குறுகிய கால அவகாசத்தில் நம்மோடு பிரச்சினைகளை விவாதித்த Jt.CCA அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். 

பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கிறோம். 

தோழமையுடன் R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர். 
5 2 25.

Post a Comment

0 Comments