AIBDPA TN நன்றி நன்றி நன்றி !!!
ஏழாவது தமிழ் மாநில மாநாடு திருச்சி வரவேற்பு குழு தோழர்களுக்கு மாநிலச் சங்கத்தின் சார்பில் நன்றி🙏 நன்றி🙏
அருமை தோழர்களே !!
2024 டிசம்பர் 19, 20 தேதிகளில் திருச்சியில் மாநில சங்கத்தின் ஏழாவது தமிழ் மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது. விசாலமான அரங்கம், கண்கவர் மேடை அலங்காரம், தோரணங்கள், சுகாதாரமான தங்குமிடம், ஆரோக்கியமான உணவு, உபசரிக்க தொண்டர்கள் குழு என அனைத்து வகைகளிலும் சிறப்பாக அமைந்த மாநில மாநாடு.
அதை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த திருச்சி வரவேற்பு குழுவிற்கு மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்💐 பாராட்டுக்கள்👏👏
வரவேற்புக்குழு தலைவராக இருந்து வழிகாட்டிய அருமை தோழர் R.ஸ்ரீதர் அவர்களுக்கும், மாநாட்டு வரவேற்புக் குழுத் செயல் தலைவர் ஆகிய தோழர் I.ஜான் பாஷா, தோழர் T.தேவராஜ், பொது செயலர் தோழர் A. இளங்கோவன், தோழர். K.சின்னையன் பொருளாளர் தோழர். L.அன்பழகன், தோழர் P.கிருஷ்ணன், தோழர். C.ராமச்சந்திரன், தோழர் A. சண்முகம் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும் BSNLEU முன்னாள் மாநில பொருளாளர் தோழர். அஸ்லாம் பாஷா, முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர். சுந்தரராஜன் உள்ளிட்ட BSNLEU, TNTCWU தோழர்களுக்கும், AIPRPA, NCCPA உள்ளிட்ட தோழமை சங்க தோழர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
சிக்கனமாக செலவு செய்து மாநிலச் சங்கத்திற்காக ரூபாய் 90ஆயிரம் வழங்கியுள்ள வரவேற்பு குழுவிற்கு மாநில சங்கத்தின் சார்பில் நன்றி. இத்துடன் சேர்த்து மாநிலச் சங்கத்தின் ஆண்டறிக்கை அச்சடிக்கும் செலவான ரூ.15,000/-த்தையும் வரவேற்பு குழு ஏற்றுக் கொண்டிருப்பது சிறப்பம்சம்.
தோழர்களே, மாநாட்டு நிதியினை திறமையாக கையாண்ட வரவேற்பு குழுவிற்கும் மாநிலச் சங்கம் கேட்ட நிதியினை கொடுத்திட்ட அனைத்து மாவட்ட சங்கங்களுக்கும் மாநிலச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களும்💐 பாராட்டுக்களும்🙏🙏
மீதமுள்ள மாநாட்டு நன்கொடை தொகையை இரண்டு மாவட்டங்களும் கொடுத்தால் மாநிலச் சங்கத்தின் நிதி நிலையை நம்மால் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
மாநாட்டை சிறப்பாக நடத்திட திருச்சி மாவட்ட சங்கத்திற்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
மாநிலச் செயலாளர்
24 2 25
0 Comments