சிறப்பாக நடைபெற்ற AIBDPA கும்பகோணம் மாவட்ட செயற்குழு கூட்டம்
தோழர்களே ! கும்பகோணம் மாவட்ட செயற்குழு கூட்டம் காரைக்காலில் பிப் 25 அன்று தோழர். ரா . பக்கிரிநாதன் தலைமையில் சிறப்பாக துவங்கியது. அஞ்சலியுரை தோழர் என் . சௌந்தரராஜன் ( மயிலாடுதுறை) நிகழ்த்தினார். தோழர் எம் .ஜோதி ( காரைக்கால்) வரவேற்புரை செய்தார்.
தோழர்.மு . குருசாமி ( மாநில அமைப்பு செயலாளர் ) துவக்க உரையில், திருச்சி மாநில மாநாடு முடிவுகள், மாநில செயற்குழு முடிவுகள், பென்சன் மாற்றம், மருத்துவபடி, சென்னை கூட்டுறவு சொசைட்டி, மத்திய பட்ஜெட் முதலியவற்றை விளக்கினார்.
சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர். எஸ். பாலசுப்பிரமணியம் ( காரைக்கால் ) கொளரவிக்கப்பட்டார். தோழர். கே .டி . முருகையன் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் மாவட்ட சங்கத்தில் இணைந்தார். அவரும் கொளரவிக்கப்பட்டார். தோழர் .மு . குருசாமி மாநில அமைப்பு செயலாளர் கொளரவிக்கப்பட்டார் .
செயற்குழுவை தோழர்கள் : வெ .கு .நிலவழகன், பிரேம்குமார் ( CITU ) வாழ்த்தினார்கள்.
3 பக்க அறிக்கை, வரவு செலவு அறிக்கையை தோழர் மாவட்டச் செயலர் தோழர். கே .மணிவண்ணன் முன்மொழிந்தார் . விவாதத்தில் 8 தோழர்கள் கலந்துக் கொண்டனர்.
அறிக்கை, வரவு செலவு கணக்கு திருத்தத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
🔥 முடிவுகள் 🔥
🔸 கிளை கூட்டங்கள் நடத்துவது
🔸 மாநில செயற்குழு முடிவின்படி, ஒவ்வொரு உறுப்பினரும் தலா ₹ 700 ( சங்க இதழ் ₹500, நன்கொடை ₹200 ) வழங்குவது .
மார்ச் 8 அன்று சகோதரர் அமைப்புகளுடன் இணைந்து மகளிர் தினம் கொண்டாடுவது .
🔸 உறுப்பினர் சேர்க்கை நடத்துவது
🔸 அடுத்த செயற்குழு கூட்டம் மே முதல் வாரம், மயிலாடுதுறையில் நடத்துவது .
செயற்குழு முடிவுகளை அமுல்படுத்துவோம் !
சிறப்பாகக் கூட்டம் ஏற்பாடு செய்ய காரைக்கால் கிளைக்கு வாழ்த்துக்கள்!💐
கே . மணிவண்ணன்
மாவட்ட செயலாளர்.
🎈🎈🎈🎈🎈🎈🎈
0 Comments