சிறப்பாக நடைபெற்ற திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம்
தோழர்களுக்கு வணக்கம்!
22.02.2025 சனிக்கிழமை காலை 11 மணி அளவில், AIBDPA திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் தோழர்.I. ஜான் பாட்ஷா அவர்கள் தலைமையில் சறப்பாக நடைபெற்றது. தோழர். K. சின்னையன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தோழர்A.சண்முகம் அவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் (பொறுப்பு) A.இளங்கோவன் அவர்கள் இடைக்கால மாவட்ட செயல் பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து மாநில செயலாளர் தோழர் R.ராஜசேகர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த மாவட்ட செயற்குழுவுக்கு பிறகு தோழர். K. சின்னையன் அவர்கள் தொடர்ந்து மாவட்ட செயலாளராக செயல்படுவார் என்றும், திருச்சி மாவட்ட மாநாட்டை ஏப்ரல் மாதம் நடத்துவது என்றும் மாவட்ட செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர். L. அன்பழகன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
A.இளங்கோவன்
மாவட்ட செயலாளர் (பொறுப்பு) AIBDPA-
திருச்சி
0 Comments