Latest

10/recent/ticker-posts

நிவாரண நிதி வழங்கல் - சபாஷ் கடலூர் மாவட்டம் !!

 நிவாரண நிதி வழங்கல் - சபாஷ் கடலூர் மாவட்டம் !!


தோழர்களே ! வணக்கம். 

      கடலூரில் 09.12.2024 அன்று நடைபெற்ற நமது மாவட்ட செயற்குழுவில்  நமது சங்கத்தின்  உறுப்பினர்கள் இறந்தால், அவர்களது குடும்பத்திற்கு நிவாரண நிதியாக    (Death Relief Fund) ரூ.5,000/-  வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டது.

         AIBDPA விருத்தாசலம் கிளைத்தலைவர் தோழர் V.விஸ்வநாதன்(SDE Rtd) பெண்ணாடம் அவர்கள் 01.02.2025 அன்று இயற்கை எய்தினார்.

         இன்று (08.02.2025) தோழரின் மனைவி திருமதி. கனிமொழி விஸ்வநாதன் அவர்களிடம்   நிவாரண நிதி ரூ.5,000/-மாவட்ட சங்கம் சார்பில் வழங்கினோம்.

       பெண்ணாடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தோழர்கள்   I.M.மதியழகன் (மாவட்ட செயலர்) N.மேகநாதன்(மாநில துணைத் தலைவர்) A.அண்ணாமலை (மாவட்ட உதவி செயலர்), G.கோவிந்தராஜலு (மாவட்ட அமைப்பு செயலர்) T.ராதா (கிளைச் செயலர், விருத்தாசலம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவண் 
I.M.மதியழகன் 
மாவட்ட செயலர்
கடலூர் மாவட்டம்.

கடலூர் மாவட்ட சங்கத்தின் Death Relief Fund வழங்கிடும் முன் முயற்சிக்கு மாநிலச் சங்கத்தின்   பாராட்டுகள். முன்முயற்சிக்கு வாழ்த்துக்கள் தோழர்களே

🙏 R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
8.2.25





Post a Comment

0 Comments