மதுரையில் ஓய்வூதியர் முழக்கம் இதழ் அறிமுக நிகழ்ச்சி- 29.3.25.
அருமை தோழர்களே,வணக்கம்....
கடந்த 18.3.25 அன்று ஓய்வூதியர் முழக்கம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து மதுரையில் இன்று(29.3.25) இதழ் அறிமுக நிகழ்ச்சி தோழர். M. செளந்தர்ராஜ் மாவட்ட தலைவர் தலைமையில் BSNLEU சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தோழர். S. ஜான்போர்ஜியா மாநில உதவி சேயலர் ஓய்வூதியர் முழக்கத்தை அறிமுகபடுத்தி வெளியிட முதல் பிரதியை தோழர். P. கணேசன் மாவட்ட துணைத்தலைவர் பெற்றுக் கொண்டார். தோழர் G. சுந்தர்ராஜன் மாநில அமைப்பு செயலர் இதழ் குறித்தும் நடக்க இருக்கும் NCCPA போராட்டம் குறித்தும் பேசினார்.
ஐந்து ஆண்டு சந்தாக்கள் இன்று இருபது தோழர்கள் முன்வந்து கொடுத்து உள்ளார்கள். தோழர். ரிச்சர்ட் மாவட்ட செயலர் BSNLEU வாழ்த்துரை வழங்கினார். தோழர் வடிவேல் முருகன் TT இந்த மாதம் ஓய்வு பெற இருக்கிறார். அவருக்கும் பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
இறுதியாக தோழர். R. சண்முகவேல் மாவட்ட பொருளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
C. செல்வின் சத்தியராஜ் DS AIBDPA MA*
0 Comments