AIBDPA TN சுற்றறிக்கை 15/25.....dt.25.3.25
Jt.CCA திருமதி கௌதமி பாலாசிங் அவருடன் சந்திப்பு.
தோழர்களே,
Jt.CCA திருமதி கௌதமி பாலாசிங் அவர்களை மாநிலச் சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலர் தோழர் R.ராஜசேகர், மாநில அமைப்புச் செயலர் தோழர் A. ஆரோக்கிய நாதன், தோழர் R.சீனிவாசராகவன் ஆகியோர் சந்தித்து நிலுவையிலுள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
பிரச்சனைகளும் விளக்கங்களும்:-
1) CCA அலுவலகத்தை பிரிப்பது குறித்து
ஏற்கனவே கடிதம் கொடுத்து இருந்தோம். நிர்வாகம் இந்த பிரச்சனை குறித்து முதல் கட்டமாக கோயம்புத்தூரில் ஒரு கிளை அலுவலகம் துவங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அந்த அலுவலகத்தில் பணிகள் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. நாம் அதனை இப்போது முழுமையான கிளை அலுவலகமாக இருக்க வேண்டும் என்றும் கூடுதலாக மதுரையிலும் அலுவலகம் துவங்க வேண்டும். அது தென்மாவட்ட ஓய்வூதியர்களுக்கு பயனுள்ளதாக அமையுமென வலியுறுத்தி உள்ளோம்.
2) நோஷனல் இன்கிரிமெண்ட் தொடர்பாக.
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
GM அலுவலகத்தில் இருந்து Revisied Fixation போட்டு கடிதங்கள் முழுமையாக வந்த பிறகு அந்த பணிகள் தொடங்கும்.
வழக்கு தொடுத்தவர்களுக்கு என்ன தேதியிலிருந்து வழங்குவது என்பது தொடர்பாக இன்னும் DOTயின் பதில் வரவில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.
3) போன் மெக்கானிக் LPD பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. இப்பிரச்சனைகள் DOT நிர்வாகம் எதிர்மறையான நிலை எடுத்து இருக்கிறார்கள்.
இதற்கு மேல் அந்த பிரச்சனையை விவாதிக்க வேண்டாம் என்ற நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். அதையே நமக்கு பதிலாக கூறப்பட்டிருக்கிறது.
நாம் இந்த பிரச்சனையை மத்திய சங்கத்தின் மூலமாக DOTயிடம் விவாதிப்பது என்றும், பிறகும் பிரச்சினை தீரவில்லை என்றால் அதற்கான நடவடிக்கைகளை மாநில சங்கம் எடுக்கும்.
4) CCA அலுவலகத்தில் Despatch section தொடர்பாக முறைப்படுத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
இதற்கு மேல் பிரச்சினை இருக்காது என்று அவர்கள் உறுதி அளித்து இருக்கிறார்கள்.
5) பிறகு சிக்கலாக கருதப்படும் தனி நபர்கள் பிரச்சினைகள் குறித்து கூடுதல் கவனம் வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
1) சரோஜா @ சரஸ்வதி மதுரை.
2) சாந்தா w/o அருணாச்சலம் திருநெல்வேலி
3) ராஜகுமாரி w/o ஜெயக்கொடி வேலூர்
4) தங்கமணி w/o அரசப்பன் கோயம்புத்தூர்
போன்ற பிரச்சனைகள் பல மாத காலமாக நிலுவையில் இருக்கின்றன. இவை தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
Jt.CCA அவர்களும் உடனடியாக கணக்கு அதிகாரிகளிடம் இந்த பிரச்சனைகளை அனுப்பி தகவல் சேகரித்து இருக்கிறார்கள். விரைவாக தீர்க்கப்படும் என்று எதிர் பார்க்கின்றோம்.
6) பல மாத காலமாக தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்த 10 மாவட்டங்களில் இருந்து நாம் சேகரித்த 104 பிரச்சினைகளை அடங்கிய கடிதத்தை பற்றி விவாதித்தோம்.
Jt.CCA அவர்கள் நம்முடன் முயற்சியை வெகுவாக பாராட்டினார்கள். இதுபோன்று கடிதங்கள் வந்தால் நாங்கள் உடனடியாக அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். இந்த 104 பிரச்சினைகளையும் பதினைந்து நாட்களுக்குள் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்று உறுதி அளிக்கப்பட்டது.
தோழர்களே, நடைபெற்ற சந்திப்பு சிறப்பாக இருந்தது. பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
மாநிலச் செயலாளர்
25.3.25
0 Comments