AIBDPA TN BSNL DGM (Finance) திரு. அரவாழி அவர்களுடன் சந்திப்பு
தோழர்களே,
சென்னை CGM அலுவலகத்தில் BSNL DGM (Finance) திரு. அரவாழி அவர்களை மாநில சங்கத்தின் சார்பாக மாநில செயலர் தோழர் R.ராஜசேகர் சந்தித்து கீழ்க்கண்ட பிரச்சினை குறித்து பேசப்பட்டது.
1) கோயம்புத்தூரில் ஐந்து கணக்கு அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய Pay Fixation arrears குறித்து விவாதிக்கப் பட்டது.
இது குறித்து பரிசீலித்து வருவதாக பதிலளித்துள்ளார்.
2) ஒவ்வொரு காலாண்டுக்கும் வழங்கப்படவேண்டிய Medical allowance முறையாக ERPயில் கால தாமதமின்றி Update செய்யப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டது.
BA மட்டத்தில் அதிகாரிகளுக்கு தாக்கீது தரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
நமது மாவட்ட செயலாளர்களும் கணக்கு அதிகாரிகளை சந்தித்து மார்ச் 15ம் தேதிக்குள் அப்லோட் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
12.3.25
0 Comments