Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சென்னை CCA அலுவலகத்தில் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகள்

 AIBDPA TN CCA அலுவலகத்தில் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகள் !!

தோழர்களே, 

          மாநிலச் சங்க செயற்குழு முடிவின்படி மாவட்ட மட்டங்களில் தீர்க்கப்படாத பிரச்சினைகளை CCA நிர்வாகத்திற்கு கடிதம் மூலமாகவும் அனுப்புவது என மாநிலச்  சங்கம் முடிவு எடுத்திருந்தது. அதன் அடிப்படையில் 10 மாவட்ட சங்கங்கள் தங்களுடைய பிரச்சனைகளை  அனுப்பி யிருக்கிறார்கள். அந்த பிரச்சனைகளை தொகுத்து மாநிலச் சங்கம் CCA நிர்வாகத்திற்கு  கடிதம் மூலமாக கொடுத்திருக்கின்றது. 

.              ஈரோடு, மதுரை, வேலூர், நாகர்கோவில், விருதுநகர், திருநெல்வேலி, குன்னூர்,  கடலூர், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் இருந்து 104 பிரச்சினைகள் பெறப்பட்டுள்ளன. 

சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் ஓசூரில் 29.3.25 அன்று நடைபெற உள்ள அதாலத்திற்கு தங்களின் பிரச்சனைகளை கொடுத்திருக்கிறார்கள். இந்த பிரச்சினைகளை நிர்வாகம் விரைவாக  தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 




அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாநில சங்கம் அறிவிக்கும். 


தோழமையுடன் R.ராஜசேகர் 
மாநில செயலாளர்
12.3.25

Post a Comment

0 Comments