AIBDPA TN மூன்றாம் கரமாய் முளைக்கும்,ஓய்வூதியர் முழக்கம்..!!!
📯✍️📜📃🗒️🗓️📰📖📚🖊️🖋️✒️📝🖍️✏️
18,
போராட்டக் குறியீடாய்
எல்லோருக்கும்...
பொன் எழுத்துக் குறிப்பீடாய் நமக்கு...
18,மார்ச் 2025
ஓய்வூதியர் குரலுக்கு புது ஒலிபெருக்கி கிடைக்கும் நாள்...
ஓய்வூதியர் உரிமைக்குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கும் நாள்...
வெள்ளைக் காகிதத்தில் சிவப்பை விதைக்கும் நாள்,
உண்மைகளை, உரிமைகளை,
புத்தமாய்ப் பதிக்கும் நாள்...
ஓய்வூதியர் முழக்கம்...
பிரசவிக்கும் போதே,
பீடு நடை போடும் தோழன்...
பீரங்கியாய் பேனாவை பயன்படுத்தும் வீரன்...
தமிழ் மாநில AIBDPA
தலையில் புது மணிமகுடம்...
நீண்டகாலக் கனவுதனை
நிறைவேற்றும்
புது உதயம்...
ஆவணமாகச் சேர்த்து வைக்க,
அச்சடிக்கும் சட்டப் புத்தகம்...
மின்னணுத் தகவல் குறிப்பு,
மின்னலென மறைந்து போகும்...
கைகளில் தவழும் இதழோ,
கண்ணுழைந்து
அறிவில் புக்கும்...
காலங்கள் கடந்த போதும்,
கை விளக்காய் என்றும் ஒளிரும்...
துண்டுப் பிரசுரங்களில்,
துவங்கியதே
தேச விடுதலை முழக்கம்...
சுதேசி சஞ்சிகைகள் விதேசிகளை விரட்டியது நமது விடுதலையின் வரலாறு...
சமுதாய மாற்றத்திற்கும்,
சமத்துவத்தின் அடிதளத்திற்கும்,
படிக்கற்களாய் பத்திரிகைகள்...
தொழிற்சங்க இயக்கங்களின் தூண்களாக சங்கப் பத்திரிக்கைகள்...
நமக்கென ஒரு இதழ் இன்று உதயமானது...
நமது சங்க
நாடித் துடிப்பாக
இது விளங்கப்போகுது...
ஓய்வூதியர் கரங்களிலே ஒளி விளக்காய் இது ஒளிரும்...
உண்மைக்கும் உரிமைக்கும்
உரைகல்லாய் இது இருக்கும்...
ஓய்வூதியர் தேவைகளை எடுத்து இயம்பும்...
துறையின் சட்டங்களை, விதிகளை நம் சட்டைப் பையில் பத்திரப்படுத்தும்...
சங்கத்தின் தகவல்களோடு, சமுதாயத்தையும் விழிக்க வைக்கும்...
சங்க வரலாற்றை வரிகளாக்கும்,
அஞ்சும் அடிதட்டின் அவலம் பேசும்...
மொத்தத்தில்,
இது சங்க இதழ் மட்டுமல்ல,
சமுதாயச் சங்கொலி என,
சரித்திரத்தில் இடம் பிடிக்கும்...
மாநிலச் சங்கத்தை மனதார பாராட்டுகின்றோம்...
ஆசிரியர் குழுவுக்கு கரம் குலுக்கி நன்றி சொல்வோம்...
இது இதழல்ல,
எங்கள் தோழன்...
இன்னும் சிறப்பாக்க எங்களின் தோள் கொடுப்போம்!!
புரட்சி வாழ்த்துக்களுடன்,
ப சரவணன் ✍️
மாநில உதவிப் பொருளாளர்,
AIBDPA, திருவண்ணாமலை.
📖📚📙📘🖊️🖋️✒️📝✏️🫵💪🚩
0 Comments