AIBDPA சேலம் கிளைகளின் இணைந்த கூட்டம்
15.3.2025 சனிக்கிழமை அன்று சேலம் BSNLEU அலுவலகத்தில் வைத்து நகரக் கிளைகளின் கூட்டம் தோழர். M.மதியழகன் DP அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மெய்யனூர் கிளைச் செயலர் தோழர். P. சம்பத் அனைவரையும் வரவேற்று நகரத்தில் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் நடைபெறுவது பற்றி கூறினார்
AIBDPA தோழர்கள் E.கோபால் ACS, S.அழகிரிசாமி COS, B.சுதாகரன் DVP, S.தமிழ்மணி DS BSNLEU மாவட்ட செயலர் S.ஹரிஹரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். TNTCWU மாவட்டத் தலைவர் தோழர். K. ராஜன், AIBDPA மாவட்டப் பொருளர் தோழர். P. தங்கராஜு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சேலத்தில் மாதாந்திரக் கூட்டத்தை இரண்டாவது வாரத்தில் இனிமேல் தவறாமல் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் BSNLEU தோழர்கள் ராதாகிருஷ்ணன் ADS, முருகேசன் BS GM(o), சிவகுமார் BS SVT, மாணிக்கம் BS Main, ஶ்ரீனிவாசராஜு, TNTCWU மாவட்ட பொருளர் P. செல்வம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக தோழர். D.சுப்பிரமணி மெயின் கிளைச் செயலர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளின் மூலமாக இயக்கத்தை மேம்படுத்தி, மேலெடுத்துச் செல்லும் அனைத்து தோழர்களுக்கும் மாநிலச் சங்கத்தின் சார்பில் பாராட்டுக்கள்💐 வாழ்த்துக்கள்🎊
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
16.3.25
0 Comments