Latest

10/recent/ticker-posts

எழுச்சியுடன் நடைபெற்ற AIBDPA ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம்.

 எழுச்சியுடன் நடைபெற்ற AIBDPA ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம்.





 அன்பு தோழர்களே வணக்கம் 

            இன்று 26.3.25 அன்று ஈரோடு கூடலிங்கம் திடலில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவடடத் தலைவர் தோழர். P.சின்னசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது . தோழர். N. குப்புசாமி மாநில உதவி தலைவர் அவர்கள் மாவட்ட செயற்குழுவை துவக்கி வைத்தார். 

            காலை11.00 மணியளவில் ஓய்வூதியர் முழக்கம் பத்திரிக்கை இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. தோழர் என் குப்புசாமி மாநில உதவி தலைவர் அவர்கள் வெளியிட முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர். S.அய்யாசாமி அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்கள் இரண்டாம் பிரதியை L.பரமேஸ்வரன் மாநில உதவி செயலாளர், தோழர். P சின்னசாமி  மாவட்டத் தலைவர் அவர்கள்  மூன்றாம் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள்.

          மாவட்ட செயற்குழு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. மாவட்ட முழுமைக்கும் 400 ஓய்வூதியர் முழக்கம் கிளைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது. கிளைகளில்  சந்தா சேர்ப்பது என்று கிளைச் செயலாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு  அளித்தார்கள். பின்பு 1/ 12/ 23 முதல் 28/2/2025 முடிய காலகட்டத்திற்கு உண்டான வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது மாவட்ட செயற்குழுவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உறுப்பினர் சரிபார்ப்பு இயக்கத்தை மிகச் சிறப்பாக நடத்திய கிளைகளுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

     பின்னர் நடைபெற்ற அமைப்பு நிலை விவாதத்தில் 18 கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் தோழர். V மணியன் தொகுப்புரை வழங்கினார். மாநில சங்க இதழ் மாவட்ட செயலர் முன்மொழிவு அடிப்படையில் கிளைகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. சுமார் 40 சந்தாக்கள் கிளை செயலர்களிடம் இருந்து பெறப்பட்டது.

                மாவட்ட செயலர் தோழர். V மணியன் மூன்று மாத காலத்திற்கு விடுப்பில் செல்வதால் தோழர். எம். நடராஜன் மாவட்ட உதவி செயலாளர் பொறுப்பு செயலாளராக செயல்படுவார் என மாவட்ட செயற்குழு  ஒருமனதாக முடிவு செய்தது. மாவட்ட செயற்குழுவில் நீண்ட நாட்களாக தேங்கி இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு, ஏப்ரல் மாத இறுதிக்குள் மாநிலச் சங்கம் உடனடியாக ஒரு போராட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று செயற்குழுவில்முடிவு எடுக்கப்பட்டது. 

          பென்சன் பட்டுவாடாவில் காலதாமதம் / மெடிக்கல் அலவன்ஸ் /D L C காலதாமதம் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண போராட்டத்தில் செல்ல வேண்டும் என்று இந்த மாவட்ட செயற்குழு வலியுறுத்துகிறது.  தோழர். ஜி. வெங்கடேசன் மாவட்ட பொருளாளர் அவர்கள் நன்றி கூறினார்கள்

குறிப்பு  :-

தோழர்களே !!

M. நடராஜன் மாவட்ட துணை செயலாளர் மாவட்ட பொறுப்பு செயலாளராக செயல்படுவார் என்று மாவட்ட செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. எனவே அந்த அடிப்படையில் கிளை செயலாளர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

  தோழமையுள்ள
V மணியன் மாவட்ட செயலாளர். 
ஈரோடு

Post a Comment

0 Comments