Latest

10/recent/ticker-posts

திருச்சியில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் தின சிறப்பு கூட்டம்.

 திருச்சியில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் தின சிறப்பு கூட்டம்




                 15.3.2025 இன்று திருச்சி GM  அலுவலகத்தில் உள்ள கான்பரென்ஸ் ஹாலில் (கூட்ட அரங்கில்) காலை 11 மணி அளவில் AIBDPA மாநில மகளிர் குழு தோழியர். M. மல்லிகா அவர்கள் தலைமையில் மகளிர் தின சிறப்பு கூட்டம் நடைபெற்றது. தோழியர். தேவகி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 அதைத்தொடர்ந்து BSNLEU முன்னாள் மாநில பொருளாளர்  தோழர். S. அஸ்லம் பாஷா அவர்களும், AIBDPA மாநில பொருளாளர்  தோழர். A. இளங்கோவன் அவர்களும், BSNLEU மாவட்ட செயலாளர்  தோழர். K.செல்வராஜ் அவர்களும் வாழ்த்தி பேசினார்கள். 55க்கும் மேற்பட்ட பெண் தோழியர்கள் கலந்து கொண்ட  மகளிர் தின சிறப்பு கூட்டத்தில், பெண்ணுரிமை பற்றி  பல  பெண்கள் பேசினார்கள்.

 இறுதியாக உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு கன்வினர் தோழியர்.  M. விஜயலட்சுமி அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். இறுதியாக  கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து  மகளிர்க்கும் நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.

 தோழமையுடன் 
AIBDPA, BSNLEU, TNTCWU
மூன்று சங்கங்களின் கூட்டமைப்பு -திருச்சி

Post a Comment

0 Comments