சிறப்பாக நடைபெற்ற கோவில்பட்டி கிளையின் பொதுக்குழு கூட்டம்
அன்பு தோழர்களே !!
நமது கோவில்பட்டி கிளையின் சார்பில் 15/03/25 அன்று காலை 1100 மணி அளவில் மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள பாரதி இல்லத்தில் (புனித ஓம் கான்வென்ட் எதிர்புறம்) நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு கிளைத் தலைவர் தோழர். R. மகேந்திரமணி தலைமை தாங்கினார். மாவட்ட உதவித் தலைவர் தோழர். P. முத்துராமலிங்கம் அஞ்சலி உரையாற்றினார். கிளைச் செயலாளர் தோழர். S.ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அகில இந்திய உதவித் தலைவர் தோழர்.S. மோகன்தாஸ் அவர்களும் மாவட்டச் செயலாளர் தோழர். P. ராமர், மாவட்டப் பொருளாளர் தோழர். K.கணேசன் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் நன்றி உரை கூறினார்கள். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு நல்ல ஆலோசனை கூறிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னதாக மாநிலச் சங்கம் வழங்கிய உறுப்பினர் சந்திப்பு இயக்க அறிக்கை அனைவருக்கும் வழங்கப்பட்டது. மாநில மாவட்ட செயற்குழு முடிவுகளின்படி ஓய்வூதியர் முழக்க பத்திரிக்கை சந்தா ரூ.500/- ஐ கீழ்க்கண்ட தோழர்கள் வழங்கினர். ஓய்வூதியர் முழக்க பத்திரிக்கை சந்தா ரூ.500/- ஐ வழங்கிய அனைவருக்கும் நன்றி.
1. R. முருகையா
2. K.கோலப்பன்
3. P. முத்துராமலிங்கம்
4. V. தமிழரசன்
5. K. சுப்பையா
மேலும் வரும் புதன் வியாழன் வெள்ளி கிழமைகளில் ஓய்வூதியர்களை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.
S.ஆறுமுகம்
கிளைச் செயலாளர்AIBDPA கோவில்பட்டி
0 Comments