சிறப்பாக நடைபெற்ற கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்
![]() |
தோழர்களே
கோவை மாவட்ட முதல் செயற்குழு 22.3.25 அன்று மாவட்டத் தலைவர் தோழர். B. சௌந்தரபாண்டியன் அவர்கள் தலைமையில் 18 மாவட்ட நிர்வாகிகளும் 7 சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்ட கோவை மாவட்ட முதல் செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது, மாவட்டச் செயலாளர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்டத் தலைவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க நிதிநிலை அறிக்கை எதிர்பாராத விதமாக மாவட்ட பொருளாளர் அவர்கள் இல்லத்தில் துக்க நிகழ்ச்சி ஏற்பட்டுவிட்ட காரணத்தினால் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை மற்றும் அதனுடைய நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்க இயலாது என்று கூறி மற்ற நிகழ்ச்சி நிரல் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மாநிலச் செயலாளர் தோழர். R. ராஜசேகர் செயற்குழுவை துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார். அதைத் தொடர்ந்து அகில இந்திய அமைப்புச் செயலாளர் தோழர். V. வெங்கட்ராமன், மாநில நிர்வாகிகள் தோழர்கள் P.M. நாச்சிமுத்து, முகமது ஜாபர், பிரசன்னா மற்றும் நிஷார் அகமது தோழியர் K. பங்கஜவல்லி உழைக்கும் பெண்கள் மாநில குழு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையில் சுமார் 12 மணிக்கு BSNLEU சங்கத்தின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா கொடியேற்று நிகழ்ச்சி COC மாவட்டத் தலைவர் தோழர். குடியரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர். சசிகுமாரன் சங்கக்கொடி கொடியேற்றி வைத்தார். R. ராஜசேகர் மாநில செயலாளர் AIBDPA அதன் வரலாற்றை எடுத்து சொல்லி வாழ்த்துரை வழங்கினார். அதைத்தொடர்ந்து தோழர் விஜயகுமார் அவர்கள் விடுதலை வீரர்கள் ராஜ்குமார், சுகதேவ், பகத்சிங் ஆகியோரின் படம் திறப்பு விழா நடத்தி வைத்தார்.
மீண்டும் 12 30 நிகழ்ச்சி துவங்கி BSNLEU மாநிலத் தலைவர் தோழர் மகேஸ்வரன் மாவட்ட செயற்குழுவை வாழ்த்தி பேசினர். அவரது உரைக்குப்பின் BSNLEU அகில இந்திய மாநாட்டிற்கு ரூபாய் 25 ஆயிரம் மாவட்டச் சங்கத்தின் சார்பாக நன்கொடை வழங்குவதற்கு மாவட்ட செயற்குழு ஒப்புதல் வழங்கியது. 1330 -1400 உணவு இடைவேளை. மதிய உணவிற்குப் பின் மாவட்ட செயலாளர் மாவட்டச் சங்க அறிக்கையை சமர்ப்பித்தார். 12 கிளை செயலாளர்களும் 2 மாவட்ட நிர்வாகிகளும் விவாதத்தில் கலந்து கொண்டனர். விவாதம் மிகவும் அற்புதமான முறையில் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இறுதியாக மாவட்ட செயலாளர் இறுதி உரைக்கு பின் மாநிலச் செயலாளர் நிறைவுறை செய்தார்.
இறுதியாக தோழர். C. ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளர் ரத்தின சுருக்கமாக தோழரின் அனுபவங்களை பங்கிட்டு நன்றி உரை கூறி மாவட்ட செயற்குழு நிகழ்ச்சிகளை நிறைவு செய்தார்
கலந்து கொண்டு சிறப்பித்து தந்த அனைத்து கிளைச் செயலாளர் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் அகில இந்திய அமைப்பு செயலாளர் ஆகியோருக்கு மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்.
0 Comments