Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற கோவை மாவட்ட சூலூர் கிளை பொதுக்குழு கூட்டம்

சிறப்பாக நடைபெற்ற கோவை மாவட்ட சூலூர் கிளை பொதுக்குழு கூட்டம்




தோழர்களே !!

        26.3.25 அன்று நடைபெற்ற சூலூர் கிளையில்  31 தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்திற்கு  தலைமை கிளை தலைவர்  தோழர். ஜெயக்குமார் திலகம் அவர்கள் நடத்திக் கொடுத்தார். அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது அதைத் தொடர்ந்து கிளைச் செயலாளர் தோழர். கிருஷ்டி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். 

             அதைத்தொடர்ந்து மாநில அமைப்புச் செயலாளர் தோழர். பி. எம். நாச்சிமுத்து அவர்கள் மாநில, மாவட்ட, அகில இந்திய சங்க செயல்பாடுகள் குறித்து  எடுத்துக் கூறி   வாழ்த்துக்களை பதிவு செய்தார். மாநில நிர்வாகியாக  புதியதாக தேர்வு செய்யப்பட்ட தோழர் அவர்களுக்கு  கிளையின் சார்பாக தோழர். பாரதிமோகன் கதர் ஆடை அணிவித்து கௌரவிக்கபட்டது.  மாவட்ட செயலாளர் மாவட்ட சங்கத்தின் சார்பாக செய்திருக்கக் கூடிய பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

                     அருமையான செயல்பாட்டு  திட்டம்  நிர்வாகிகளும் தோழர்களும் மிகச் சிறப்பான ஏற்பாடு. 30 நாற்காலிகள் கிளையின் சார்பாக சொந்தமாக வாங்கப்பட்டு மின்விசிறி வசதி ஏற்படுத்தி கிளை தோழர்களை அமர்த்தி கருத்துக்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்த நிர்வாகிகளுக்கும் முன்னணி தோழர்கள் மற்றும் கிளை தோழர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

     இறுதியாக தோழர் சத்தியமூர்த்தி  SDE RTD நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

 AIBDPA TN சூலூர் கிளை தோழர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்💐

கிளை உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக 30 சேர்களும்,   மின்விசிறிகளும் சொந்தமாக வாங்கி  ஏற்பாடு செய்து கொண்ட சூலூர் நிர்வாகிகளையும் ஒத்துழைப்பு கொடுத்த உறுப்பினர்களையும் மாநில சங்கம் வெகுவாக பாராட்டுகிறது.🙏 

தோழமையுடன்,  
R.ராஜசேகர்  
மாநிலச் செயலாளர்.
26.3.25

Post a Comment

0 Comments