NCCPA தமிழ்நாடு இணைப்புக் குழு* !
======================
NCCPA அறைகூவல் !
03.04.2025 - நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் !!!
======================
தோழர்களே !!
சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 2025 நிதி மசோதாவில் சில அபாயகரமான திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்தும் போது ஓய்வூதியர்களிடையே, ஓய்வூதிய தேதியை அடிப்படையாகக் கொண்டு பாரபட்சமான, பிரிவினையை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டுள்ளது.
ஏற்கனவே CCS (Pension) Rules, 1972 /2021 கீழ் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் பலன்கள் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அறிவிப்பு ஓய்வூதியர் மத்தியில் கடும் கோபத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.
மாநிலங்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஓய்வூதிய விதிகளில் மாற்றம் ஏதுமில்லை என்று தான் சொன்னாரே தவிர, 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அமலாக்கத்தின் போது ஏற்கனவே ஓய்வு பெற்றோருக்கு எந்தவித பாரபட்சமும் காட்டப்பட மாட்டாது. Pension Parity தொடரும் என்ற உறுதிமொழியை அளிக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட நிதி மசோதாவில் ஓய்வூதியர்கள் சம்பந்தமான *அரசின் மறைமுக சதித்திட்டம் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அரசின் பசப்பு வார்த்தைகளில் நாம் ஏமாறப் போவதில்லை.
இந்த கொந்தளிப்பான சூழலில், NCCPA CHQ அறிவித்துள்ள உடனடியான கண்டன ஆர்ப்பாட்டம் வரவேற்கத்தக்கது. நமது முதற்கட்ட போராட்டத்தின் எழுச்சியைக் கண்டே மோடி அரசு அஞ்சி நடுங்க வேண்டும். தனது ஓய்வூதியர் விரோத சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும்.
ஆகவே 3.4.2025 ஆர்ப்பாட்டத்தை NCCPA மாவட்ட அமைப்புகள் / அதன் உறுப்பு சங்கங்கள், பிற ஓய்வூதியர் சங்கங்களையும் இணைத்து கொண்டு அந்தந்த மாவட்டங்களில் சக்திமிக்கதாயும், எழுச்சியுடனும் நடத்திடுமாறு NCCPA மாநில இணைப்புக் குழு கேட்டுக் கொள்கிறது.
உறுதியடன் களம் காண்போம் !!
அரசின் சதித்திட்டத்தை முறியடிப்போம் !!
தோழமையுள்ள
P. மோகன்
மாநிலத் தலைவர்.
C. K. நரசிம்மன்
மாநில கன்வீனர்.
0 Comments