சிறப்பாக நடைபெற்ற புதுச்சேரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் ..18.04.25
சுற்றறிக்கை 15/25
அனைவருக்கும் வணக்கம்
இன்று நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டம் தோழர். V. ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக அஞ்சலி உரையை தோழர். N. கொளஞ்சியப்பன் அவர்கள் வாசித்த பின் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட செயலர் அனைவரையும் வரவேற்று வரவேற்பு நிகழ்வை முடிக்க அதன் பின் மாநில அமைப்பு செயலரும் மாவட்ட தலைவருமான தோழர் V. ராமகிருஷ்ணன் அவர்கள் ஓய்வூதியர் முழக்கத்தின் சந்தா மற்றும் அதன் விளக்கங்கள் சிலவற்றையும் எடுத்துக் கூற அதன் பின் ஓய்வுதியர் முழக்க பிரதிகளை சங்க உதவித் தலைவரும் மூத்த தோழருமான தோழர். P. சக்திவேல் அவர்கள் அனைவருக்கும் வழங்கினார்.
அதன் பின்னர் மே 20ம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தை பற்றி தோழர். N. கொளஞ்சியப்பன் மற்றும் தோழர். M. சண்முகசுந்தரம் ஆகியோர் விளக்கமாக எடுத்து உரைத்ததோடு எதிர்வரும் காலங்களில் ஓய்வூதியர்களின் பங்கு முன் வரும் போராட்டங்களில் அவசியம் என்பதை முன்வைத்தனர்.
மாவட்ட செயலர் நமது மாவட்டத்தில் நடைபெற்ற FMA பட்டுவாடாவில் சில தோழர்களுக்கு ஒரு காலாண்டு தொகை விடுபட்டது பற்றியும் விடுபட்ட தோழர்களுடைய பெயரை மீண்டும் கணக்கு அதிகாரி இடம் சேர்க்க கூறியுள்ளது பற்றியும், அடுத்ததாக குடும்ப ஓய்வூதியர் பிரச்சனை இரு நபர்களுக்கு நிலுவையில் உள்ளது அது சம்பந்தமாக மாநில சங்கத்தை தொடர்ந்து அணுகுவதாகவும் மேலும் கடந்த ஆண்டில் பணி ஓய்வு பெற்ற தோழர்களின் ஜெனரல் இன்சூரன்ஸ் தொகை திரும்ப பெறாமல் இருப்பது பற்றி தோழர் சந்திரசேகர்.1 அவர்கள் அவர்கள் கூற அதையும் மாநில சங்கம் மூலம் தீர்வு காண முயற்சிப்பதாக கூறி முடித்தார்.
அடுத்ததாக பேசிய BSNLEU மாவட்ட செயலர் தோழர். A. சுப்ரமணியன் பேசுகையில் கோவையில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டு பற்றியும் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகின்ற அவர்களது சிறப்பு மாவட்ட செயற்குழுவில் BSNEU சங்கத்தின் துணை பொது செயலாளர் தோழர். S. செல்லப்பா மற்றும் அச்சங்கத்தின் மாநில உதவி தலைவர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் நமது மாவட்ட AIBDPA தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகோள் கொடுத்தார்.
BSNLEU சங்க அலுவலகம் நிர்வாகத்தால் புணர் அமைக்கப்பட்ட பின் ஏற்பட்ட தேவைகளான மின் உபகரணங்கள் மற்றும் தண்ணீர் வசதிக்கான தேவைகளுக்கு தோழர்களிடமிருந்து பங்களிப்பு கோரப்பட்டது. அதன் அடிப்படையில் ஒரு சில தோழர்கள் பங்களிப்பை செலுத்தினர்.
கடத்த மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் உறுப்பினர்களிடமிருந்து ஆண்டு சந்தா பெறுவது பற்றி தலைவர் விளக்க அதன் பின்னர் சில தோழர்கள் ஆண்டு சந்தா செலுத்தியுள்ளனர்.
அதேபோல் ஓய்வூதிய முழக்க பத்திரிக்கை சந்தா 25 தோழர்களிடம் பெறப்பட்டுள்ளது.
இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர் M. பாலசுப்பிரமணியன் அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
நன்றி
V. ராமகிருஷ்ணன்
மாவட்ட செயலர்
புதுச்சேரி மாவட்டம்.
#################.
0 Comments