AIBDPA TN சுற்றறிக்கை எண் 21/25... dt.21.4.25
இணையவழி மாநில செயற்குழு கூட்டம் 19.4.25
தோழர்களே,
மாநிலச் சங்கத்தின் இணையவழி செயற்குழுக் கூட்டம் 19.4.25 அன்று தோழர். C.ஞானசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 16 மாவட்ட செயலாளர்கள் உள்பட 42 செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தை மத்திய சங்கத் துணைத் தலைவர் தோழர் S. மோகன்தாஸ் அவர்கள் துவக்கி வைத்தார். மத்திய அரசாங்கத்தின் ஓய்வூதிய மசோதா, எட்டாவது ஊதிய குழு, மத்திய அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் உட்பட பல்வேறு விஷயங்களை விளக்கி பேசினார். நிகழ்ச்சி நிரலை முன்வைத்து மாநிலச் செயலரும், நிதி நிலைமைகளை முன்வைத்து மாநில பொருளாளரும் விவாதத்தை துவக்கி வைத்தனர்.
மாநிலச் செயலாளர் பேசுகின்ற பொழுது மகளிர் தினக் கூட்டங்கள் கோவை, நாகர்கோவில், திருச்சி மற்றும் பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் மட்டும் தான் நடைபெற்றிருக்கிறது. வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ஓய்வூதியர் முழக்கம் 18.3.25 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வெளியீட்டு விழாக்கள் மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன என்கின்ற தகவலையும், சந்தாக்கள் இதுவரை சுமார் 200 சந்தாக்கள் வந்திருக்கின்றது. பல மாவட்டங்களில் சந்தா வசூல் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. ஜுன் மாதத்திற்குள் 3500 சந்தாக்கள் சேகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
மேலும் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இது ஒரு நல்ல அம்சம். அதோடு மத்திய அரசாங்கத்தின் ஓய்வூதியர் மசோதாவை எதிர்த்து NCCPAவின் போராட்ட அறைகூவல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றுபட்ட இயக்கமாக நடத்தப்பட்டது.
இந்த முறை மெடிக்கல் பில், அலவன்ஸ் பட்டுவாடாவில் சற்று முன்னேற்றம் இருந்தாலும் இன்னும் சில மாவட்டங்களில் மெடிக்கல் அலவன்ஸ் பட்டுவாடாவில் குறைபாடு இருக்கிறது. இது களையப்பட வேண்டும். CCA அலுவலகத்தில் 104 பிரச்சினைகளை முன்வைத்து கடிதம் கொடுத்து இருந்தாலும் இன்னும் பல பிரச்சனைகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்ற கருத்தையும் முன்வைத்து இதற்காக இந்த செயற்குழு முடிவு முடிவெடுக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் விவாதத்தை முன்வைத்துப் பேசினார் .
பொருளாளர் தோழர் A.இளங்கோவன் அவர்கள் பேசுகின்ற பொழுது மாநில சங்க நிதி நிலைமையை விளக்கி தோழர்கள் பணம் அனுப்புகின்ற பொழுது முன்கூட்டியே மாநில சங்கத்திற்கு தகவல் கொடுத்தால், வரவு வைத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதை வலியுறுத்தினார்.
பிறகு நடைபெற்ற விவாதத்தில் 20 தோழர்கள் முழுமையாக கலந்து கொண்டார்கள். செயற்குழுவை, மாநில ஆலோசகர் தோழர். C. K. நரசிம்மன், தோழர். வி. வெங்கட்ராமன் மத்திய சங்க அமைப்பு செயலாளர் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
எடுக்கப்பட்ட முடிவுகள் :-
1) ஓய்வூதியர் முழக்கம் 3500 சந்தாக்கள் ஜூன் இறுதிக்குள் சேர்ப்பது.
2) மே தினம் கூட்டங்களை தோழமை சங்கங்களுடன் இணைந்து சிறப்பாக நடத்துவது.
3) மே 20 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து வகைகளிலும் நம் தோழர்கள் கலந்து கொள்வது
4) ஈரோடு மாவட்டச் சங்க போராட்டத்திற்கு மாநிலச் சங்கம் முழு ஒத்துழைப்பு அளிப்பது,
5) ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் மாநில செயற்குழு கூட்டம் நேரடியாக நடத்துவது, அதற்கு மாவட்டங்கள் முன் வர வேண்டும்
6) சென்னை சொசைட்டி பிரச்சினைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது
7) CCA அலுவலகத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காக போராட்டத்தை நடத்துவது
உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் வாரியாக ஓய்வூதியர் முழக்கத்திற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இலக்கு.
1) கோயம்புத்தூர் 800,
2) ஈரோடு 450,
3) வேலூர் 400,
4) சேலம் 300,
5) மதுரை 200,
6) விருதுநகர் 175,
7) நாகர்கோவில் 150,
8) திருச்சி 150,
9) திருநெல்வேலி 150,
10)தூத்துக்குடி 150,
11)கடலூர் 110,
12) தர்மபுரி 100,
13)சென்னை 100,
14) பாண்டி 80
15) கும்பகோணம் 70
16) நீலகிரி 60,
17) தஞ்சாவூர் 30,
18) காரைக்குடி 25,
என்கின்ற எண்ணிக்கையில் தோழர்கள் ஓய்வூதியர் முழக்கத்திற்கான 5 ஆண்டு சந்தா 500 ரூபாய் உடனடியாக வசூலிக்க வேண்டும்.
இறுதியாக மாநில பொருளாளர் தோழர் A.இளங்கோவன் நன்றி கூறி, கூட்டம் மிக சிறப்பாக முடிந்தது.
கூட்டத்திற்கு இணையவழி ஏற்பாடு செய்து கொடுத்த தோழர். பி. ராமர் மாநில துணைத் தலைவர் அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் சார்பாக நன்றி.
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்.
21.4.25
0 Comments