Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை எண் 16/25 ......dt.8.4.25

  AIBDPA TN  சுற்றறிக்கை எண் 16/25 ......dt.8.4.25

1) GM(HR) திரு. துளசிராமன் அவர்களுடன் சந்திப்பு

தோழர்களே 

                மாநில சங்கத்தின் சார்பில் GM (HR) திரு.துளசிராமன் அவர்களை 7.4.25 அன்று மாநிலச் செயலர் தோழர் R.ராஜசேகர் மாநில அமைப்புச் செயலர் தோழர் A. ஆரோக்கியநாதன்  தோழர்.R.சீனிவாசராகவன் ஆகியோர் சந்தித்து கீழ்க்கண்ட விஷயங்கள் விவாதித்தோம். 

விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளும் நிர்வாகத்தின் நிலைபாடும். 

🚩முதல் கட்டமாக இந்த மாதம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ள மருத்துவ அலவன்ஸ் மற்றும்  மெடிக்கல் பில்கள் சற்று முன்னேற்றம் இருப்பதனை பாராட்டினோம்

        நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கைகள் இதற்கு உதவியாக இருந்ததையும் நாம் பாராட்டி தொடர்ந்து இதுபோல் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக பட்டுவாடா செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். 

மதுரை மாவட்டத்தில் விடுபட்ட 562 பேர் பிரச்சனையையும் நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரிவித்துள்ளோம்.

🚩ஈரோடு பகுதியில் BSNL MRS  கார்டுகள் Revalidation செய்வதில் உள்ள பிரச்சனையை விவாதித்தோம். 

GM (HR) அவர்கள் இது தொடர்பாக கடிதம் கொடுங்கள் நாங்கள் ஈரோடு நிர்வாகத்தோடு பேசி சரி செய்வோம் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். 

       அதேபோல் காலதாமதம் காரணமாக நிராகரிக்கப்பட்ட ஈரோடு தோழியர் கிரிஜா/ கேசவன் அவருடைய மெடிக்கல் பில் Delay condonation செய்ய CGMக்கு மீண்டும் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

🚩ஓய்வுபெற்ற தோழர்களுக்கு வரவேண்டிய குரூப் இன்ஷூரன்ஸ் பணம்  இரண்டு ஆண்டு காலமாக காலதாமதமாவதை சுட்டிக்காட்டினோம். 

ஆவன நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

🚩பிறகு பணி ஓய்வு பெற்ற மறுநாள் Increment உள்ளவர்களுக்கான Notional Increment பிரச்சனை :

வழக்கு தொடுத்தவர்களுக்கு ஓய்வுபெற்ற மறுநாளிலிருந்து இன்கிரிமெண்ட் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். 

இதுதொடர்பாக படிவங்கள் CCA அலுவலகத்திற்கு சென்றிருப்பதாகவும் அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

 GM (HR) ருடனான கூட்டம் பயனுள்ளதாக இருந்தது. 

2) PGM (நிதி) திருமதி கீதாஞ்சலி அவர்களுடன் சந்திப்பு.

        08.04.2025 அன்று PGM ( நிதி)  திருமதி கீதாஞ்சலி அவர்களை மாநிலச் சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் தோழர் R.ராஜசேகர்,  மாநில உதவிச்செயலர் தோழியர் பெர்லின் கனகராஜ்   மாநில அமைப்புச் செயலர் தோழர் A.ஆரோக்கியநாதன் ஆகியோர் சந்தித்து பேசினோம்.

🚩மெடிக்கல் பில் மற்றும்   அலவன்ஸ் பட்டுவாடாவில் இம்முறை முன்னேற்றம் இருந்ததற்கு அவர்களுக்கு நன்றியினை தெரிவித்தோம். 

           மதுரை மாவட்டத்தில்  விடுபட்ட 562 பேருடைய மெடிக்கல் அலவன்ஸ் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். 

🚩அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 5 கணக்கு அதிகாரிகளுக்கு 1.4.2004 முதல் 31.12.2019 வரை உள்ள நிலுவைத் தொகையினை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். 

            மீண்டும் அவரிடம் நம்முடைய கடிதத்தையும் சம்பந்தப்பட்டவர்களின் விண்ணப்பத்தையும் கொடுத்து இருக்கின்றோம். பரிசீலனை செய்து வருவதாக உறுதி அளித்துள்ளார். 

தோழமை வாழ்த்துக்களுடன் 
R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்.
8.4.25

Post a Comment

0 Comments